தினசரி 2ஜிபி டேட்டா: 365நாட்கள் வேலிடிட்டி.! ஜியோவின் பலே திட்டம் அறிமுகம்.!

|

ஜியோ நிறுவனம் இந்த வாரம் சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்தது, தற்சமயம் இந்நிறுவனம் மீண்டும் ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான கூறவேண்டும்.

2ஜிபி டேட்டா உள்ளிட்ட சில

அதன்படி ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.2399-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்,இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 365நாட்கள் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெலிகாம் டாக்
வலைதளத்தின் அறிவிப்பு அடிப்படையில் இந்த திட்டம் ஜியோ அல்லாத மற்றநெட்வொர்க்குகளுக்கு கால் அழைப்பு நன்மைகளைபற்றி சரியாக விவரங்கள் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தினசரி 2ஜிபி டேட்டா உள்ளிட்ட சில சலுகைகள்இந்த திட்டத்தில் இருப்பதால் பலர் இதை தேர்வு செய்ய விரும்புவார்கள்.

திட்டமான 2121

இதேபோல ஜியோவின் மற்றொரு திட்டமான 2121 திட்டத்தின் கீழ் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை 336 நாட்களுக்கு வழங்கப்படும்.

குழந்தையுடன் கண்ணாம்பூச்சி விளையாடிய நாய் - வைரல் ஆகும் வீடியோ!குழந்தையுடன் கண்ணாம்பூச்சி விளையாடிய நாய் - வைரல் ஆகும் வீடியோ!

  ஏர்டெல் ரூ.2398-திட்டம்

ஏர்டெல் ரூ.2398-திட்டம்

இதேபோல் ஏர்டெல் நிறுவனம் ரூ.2398-திட்டம் ஒன்றை வைத்துள்ளது. இந்த ஏர்டெல் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 365நாட்கள் வழங்குகிறது.

வோடபோன் ரூ.2399-திட்டம்

வோடபோன் ரூ.2399-திட்டம்

மேலும் வோடபோன் நிறுவனமும் ரூ.2399-திட்டம் வைத்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகளை 365நாட்கள் வழங்குகிறது. மேலும் ஜியோ நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.இதுதவிர ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். பின்பு இந்த திட்டத்தில் நாள்
ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

 ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா தேவையில்லை 2ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு
இருக்கவே இருக்கிறது ரூ.249-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற
நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள்
ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

108எம்பி கேமராவுடன் சியோமி மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்..!108எம்பி கேமராவுடன் சியோமி மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்..!

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199-திட்டம் தினசரி 2ஜபி டேட்டா தேவையில்லை 1.5ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இருக்கவே
இருக்கிறது ரூ.199-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு
1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த
திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்

Best Mobiles in India

English summary
Jio Introduces Rs 2399 Annual Prepaid Plan With 2GB Daily Data, New Data Add-Ons Also Announced: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X