ஜியோ டுவிஸ்ட்- அதை எடுத்துட்டு இதை கொடுத்தாங்க பாருங்க- தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகளுடன் புதிய திட்டம்!

|

வலைதளம் மற்றும் செயலியில் இரண்டு மலிவு விலை திட்டங்களை நிறுவனம் சமீபத்தில் நீக்கியது. இதன் பிறகு ரிலையன்ஸ் ஜியோ, ஜியோபோன் பயனர்களுக்கு புதிய பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டங்களானது தரவு மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோபோன் பேக் ரூ.75 திட்டமானது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் தினசரி 100 எம்பி டேட்டா, வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. தினசரி 50 எஸ்எம்எஸ், ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சினிமா, ஜியோநியூஸ் போன்ற ஜியோ பயன்பாடுகளை உள்ளடக்கியவை ஆகும். இந்த திட்டம் கூடுதலாக 200 எம்பி டேட்டாவை கூடுதல் செலவின்றி வழங்குகிறது.

ஜியோபோன் திட்டங்கள்

ஜியோபோன் திட்டங்கள்

ஜியோபோன் திட்டங்கள் குறித்து பார்க்கையில், இது ரூ.125, ரூ.155, ரூ.185 மற்றும் ரூ.749 என ஐந்து திட்டங்களை நிறுவனம் வழங்குகிறது. ரூ.125 திட்டம் ஆனது தினசரி 500 எம்பி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

28 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்

28 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்

அதேபோல் ரூ.155 திட்டமானது 28 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது வரம்பற்ற டேட்டா மற்றும் 28 நாட்கள் நன்மைகளுடன் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த பேக் ஜியோக்ளவுட், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோநியூஸ் மற்றும் ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ் அணுகலை வழங்குகிறது.

தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற அழைப்பு

தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற அழைப்பு

ரூ.185 ஜியோபோன் பேக் தினசரி 2 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் சலுகையோடு வருகிறது. அதிகவிலை திட்டமாக ரூ.749 என இருக்கிறது. 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 50 மெசேஜ்கள், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஜியோ செயலி அணுகலை வழங்குகிறது.

மிகவும் மலிவான இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள்

மிகவும் மலிவான இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள்

இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, மிகவும் மலிவான இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் பட்டியலில் இருந்து நீக்கியது. இந்த மாற்றங்கள் ஏற்கனவே இணையதளத்தில் தெரியத் தொடங்கியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை நிறுவனத்திலிருந்து ஜியோபோன் நெக்ஸ்ட் வெளியீட்டுக்கு அளவீடு செய்யப்பட்ட அணுகுமுறையாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டுள்ளது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இது வரை வழங்கி வந்த இரண்டு ஜியோபோன் திட்டங்களை வழங்குவதை நிறுத்திவிட்டது.

ரூ.39 மற்றும் ரூ.69 விலை உடன் ஜியோபோன் திட்டங்கள்

ரூ.39 மற்றும் ரூ.69 விலை உடன் ஜியோபோன் திட்டங்கள்

ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது நீக்கப்பட்ட திட்டங்கள் ரூ.39 மற்றும் ரூ.69 விலை கொண்ட ஜியோபோன் திட்டங்கள் ஆகும். இந்த இரண்டு திட்டங்களும் சூப்பர் மலிவு வகையின் கீழ் வருகின்றது. இது PAN-India அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல், ரிலையன்ஸ் ஜியோ தனது பல திட்டங்களிலிருந்து கிடைக்கும் ''Buy 1 Get 1 Free' சலுகையை நிறுத்தியுள்ளது. இது கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை வழியாக மக்களுக்கு உதவ டெல்கோ சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

0.5 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு

0.5 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.39 திட்டமானது 14 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது 100 எம்பி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குக்கும் செல்லுபடியாகும் வரம்பற்ற குரல் அழைப்புடன் வருகிறது. அதே நேரத்தில், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 69 திட்டத்தில் 0.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு 100 எஸ்எம்எஸ் உடன் 14 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த இரண்டு மலிவு விலை திட்டங்களை நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது.

புதிய ஜியோபோன் நெக்ஸ்ட்

புதிய ஜியோபோன் நெக்ஸ்ட்

மேற்கூறிய இந்த இரண்டு திட்டமும் இனி டெல்கோவின் வாடிக்கையாளர்களுக்கு அதன் இணையதளத்தின் வழியாகவோ அல்லது மொபைல் அப்ளிகேஷன் வழியாகவோ கிடைக்காது என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இந்த இரண்டு ஜியோபோன் திட்டங்களையும் நிறுத்தியுள்ளது. இந்த திடீர் முடிவிற்கு பின்னணியில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜியாபோன் நெக்ஸ்ட் இன்று அறிமுகப்படுத்தப்படுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Announced New Pack with Daily Data, Unlimited Calling and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X