Home
News

Jio அதிரடி.. எல்லோருக்கும் 12GB இலவச டேட்டா.. காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் ஆபர்!

காதலர் தினத்தை (Valentine's Day) முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 3 திட்டங்களின் மீது சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், குறிப்பிட்ட 3 திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 12ஜிபி இலவச டேட்டாவுடன் சேர்த்து, மேலும் பல இலவச நன்மைகளும் அணுக கிடைக்கும்.

Jio வின் Valentines Day ஆபரை பெற எந்தெந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்?

3 ஜியோ திட்டங்கள் மீது காதலர் தின ஸ்பெஷல் ஆபர் அறிவிப்பு!

ரிலையன்ஸ் ஜியோவின் காதலர் தின சிறப்பு சலுகைகளை பெற ரூ.249 அல்லது ரூ.899 அல்லது ரூ.2,999 மதிப்புள்ள மூன்று திட்டங்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஏனென்றால், இந்த மூன்று திட்டங்கள் மீது மட்டுமே 12ஜிபி இலவச டேட்டா உட்பட ஜியோவின் அனைத்து காதலர் தின சிறப்பு சலுகைகளும் அணுக கிடைக்கிறது.

இந்த 3 திட்டங்களின் கீழ் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

- முன்னரே குறிப்பிட்டபடி, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249, ரூ.899 மற்றும் ரூ.2,999 திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்ளுக்கு 12ஜிபி அளவிலான 4ஜி டேட்டா இலவசமாக கிடைக்கும்.

- மேலும் மெக்டொனால்ட்ஸில் (McDonalds) ரூ.199 க்கு நீங்கள் வாங்கும் உணவு பொருளுடன் ரூ.105 மதிப்புள்ள மெக்அலூ டிக்கி / சிக்கன் கபாப் பர்கர் இலவசமாக கிடைக்கும்

- மேலும் இந்திய கிஃப்ட்டிங் கம்பெனியான ஃபெர்ன்ஸ் மற்றும் பீடெல்ஸில் (Ferns and Petals) ரூ.799 மதிப்புள்ள பரிசை வாங்கினால் ரூ.150 என்கிற தள்ளுபடியும் கிடைக்கும்.

- கடைசியாக இக்ஸிகோ (Ixigo) வழியாக ரூ.4,500 மற்றும் அதற்கு மேற்பட்ட விமான பயணங்களுக்கான முன்பதிவுகளை செய்பவர்களுக்கு ரூ.750 என்கிற தள்ளுபடியும் கிடைக்கும்.

Jio வழங்கும் 12GB இலவச டேட்டாவை REDEEM செய்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் மைஜியோ ஆப் (MyJio App) வழியாகவே, ரிலையன்ஸ் ஜியோவின் காதலர் தின சிறப்பு சலுகையின் கீழ் கிடைக்கும் 12ஜிபி இலவச டேட்டாவை 'ரிடீம்' செய்ய முடியும்.

முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் மைஜியோ ஆப்பை திறக்கவும். பின்னர் அதனுள் கிடைக்கும் 'வவுச்சர்' (Voucher) டேப்பிற்கு செல்லவும். அங்கே உங்களுக்கான இலவச டேட்டா காத்திருக்கும்.

இலவசமாக கிடைக்கும் டேட்டாவின் வேலிடிட்டியானது, உங்களுடைய ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.2449 திட்டத்தின் நன்மைகள்:

ரூ.249 மதிப்புள்ள ஜியோ திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் இந்த திட்டம் மொத்தம் 23 நாட்களுக்கு செல்லுபடியாகும். டேட்டா நன்மைகளை தவிர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.899 திட்டத்தின் நன்மைகள்:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.899 திட்டமானது 90 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது. இது மொத்தம் 225ஜிபி டேட்டாவை வழங்கும். ரூ.249-ஐ போலவே இதுவும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.2999 திட்டத்தின் நன்மைகள்:

இந்த பட்டியலில் கடைசியாக உள்ள ரூ.2,999 திட்டமானது தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்கும் ஓராண்டு திட்டமாகும். அதாவது இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஓராண்டுக்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா போன்ற கூடுதல் நன்மைகளும் வணிக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Announced 2023 Valentines Day Special Offer on Rs 249 Rs 899 and Rs 2999 Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X