Coronavirus Lockdown: ஜியோ நிறுவனம் அறிவித்த அதிரடி இலவசம்.! என்ன தெரியுமா?
ஏர்டெல்,பிஎஸ்என்எல் போன்ற நிறுவனம் தங்களது சலுகைகளை அறிவித்த பின்பு, முகேஷ் அம்பானியின் தலைமையிலான ஜியோ நிறுவனமும் அதன் ஜியோபோன் பயனர்களுக்கு லாக்டவுன் நாட்களுக்கான இலவச சலுகைகளை அறிவித்துள்ளது.

100நிமிட இலவச அழைப்புகள்
வெளிவந்த அதிகாரபூர்வமான தகவலின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைத்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் 100நிமிட இலவச அழைப்புகள் மற்றும 100எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும் என்றும், இந்த நன்மைகள் வரும் ஏப்ரல் 17வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்கம்மிங் வாய்ஸ் கால்
மேலும் ஜியோபோன் வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி காலாவதியான பிறகும் கூட இன்கம்மிங் வாய்ஸ் கால்களைப் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்யும் ஏராளமான பயனர்கள்தற்போது உள்ளனர் என்றும் இந்த டெலிகாம் நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஐ,ஏடிஎம், எஸ்எம்எஸ்
கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் நாட்களில் வாடிக்கையாளர்கள் சில்லறை கடைகள் வழியாகரீசார்ஜ் செய்வது மிகவும் கடினம், எனவே இதை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் யுபிஐ,ஏடிஎம், எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் போன்ற ரீசார்ஜ் செய்வதற்கு மாற்று சேனல்களை வழங்கியுள்ளது.

100நிமிடங்கள் மற்றும் 100எஸ்எம்எஸ்
ஆனாலும் கூட சில பயனர்களார் தங்கள் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், ஜியோ அறிவித்துள்ள இலவச 100நிமிடங்கள் மற்றும் 100எஸ்எம்எஸ்கள் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் உதவியாக இருக்கும்.

Recharge at ATM என்ற புதிய சேவை
அன்மையில் ஜியோ நிறுவனம் Recharge at ATM என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது, இது ஏடிஎம் இயந்திரம்மூலம் ரீசார்ஜ் செய்யும் ஒரு புதிய வழிமுறை ஆகும். இந்த புதிய வழிமுறையில் உள்ள ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால், இதை நிகழ்த்த ஒடிபி எதுவும் தேவைப்படாது.

அதன்படிAUF Bank, Axis Bank, DCB Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank, IDFC Bank, Standard Chartered Bank மற்றும் State Bank of India போன்ற வங்கிகளின்ஏடிஎம்களின் வழியாக ஜியோ ரீசார்ஜ் நிகழ்த்த அனுமதி கிடைக்கும். மேலும் இதற்கான வழிமுறைகளைப் பாரப்போம்.

வழிமுறை-1
முதலில் உங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருகவும்.

வழிமுறை-2
அடுத்து மெயின் மெனுவில் ரீசார்ஜ் என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3
பின்னர் நீங்கள் ரீசார்ஜ் மெனுவிற்குள் வந்ததும், உங்கள் ஜியோ மொபைல் நம்பரை உள்ளிடவும்

வழிமுறை-4
பின்பு மொபைல் நம்பரை உள்ளிட்ட பிறகு OK / ENTERபொத்தானை அழுத்தவும்

வழிமுறை-5
அடுதது உங்கள் ஏடிஎம் பின் கோட்-ஐ உள்ளிட வேண்டும்.

வழிமுறை-6
பின்னர் குறிப்பிட்ட ரீசார்ஜ் தொகையை உள்ளிட்டு,ரீசார்ஜ் மதிப்பை உறுதிசெய்து என்டர்-ஐ அழுத்தவும்.
அடுத்து ஏடிஎம் இயந்திரத்தின் திரையில் ரீசார்ஜ் செய்தியை காண்பிக்கும்,அதனுடன் தொடர்புடைய தொகை உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதன்பின்பு குறிப்பிட்ட ரீசார்ஜிற்கான உறுதிப்படுத்தல் மேசேஜைப் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications