Home
News

ரூ.399 விலையில் தொடங்கும் JioFiber பிராட்பேண்ட் திட்டம்: 12 ஓடிடி சலுகைகள் இன்னும் பல!

ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற நன்மைகளுடன் பல்வேறு வகை ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை அறிவித்து வருகிறது. ஜியோ ஃபைபர் திட்டங்கள் ரூ.399 விலையில் இருந்து தொடங்குகிறது.

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள்

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற நன்மைகளுடன் பல்வேறு வகை ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை அறிவித்து வருகிறது. ஜியோ ஃபைபர் திட்டங்கள் ரூ.399 விலையில் இருந்து தொடங்குகிறது.

மலிவு விலையில் ஏணைய சலுகைகள்

மலிவு விலையில் ஏணைய சலுகைகள்

ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏணைய சலுகைகளை மலிவு விலையில் பல்வேறு அணுகலோடு வழங்குகிறது. ஜியோ ஃபைபர் 2019 ஆம் ஆண்டில் அதன் பிராட்பேண்ட் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியபோது, ​​FUP வரம்புடன் திட்டங்கள் வந்தது. இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது மாறிவருகிறது என்பதே உண்மை.

ரூ.399 விலையில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்

ரூ.399 விலையில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள் இப்போது ரூ.399 விலையில் இருந்து தொடங்குகிறது. ஜியோ ஃபைபர் அறிவிக்கும் பெரும்பாலான திட்டங்கள் வரம்பற்ற இணையம் மாதம் 3.3 டிபி என்றே வழங்குகிறது. பிஎஸ்என்எல், ஆக்ட் ஃபைபர்நெட் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் போன்ற நிறுவனங்களும் ஜியோவுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் அறிமுகம் செய்த திட்டம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் அறிமுகம் செய்த திட்டம்

ஜியோ ஃபைபர் திட்டங்கள் அறிவித்த உடனே, பாரதி ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏர்டெல் திட்டம் ரூ.499 விலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரீமியம் ஜியோ ஃபைபர்

ப்ரீமியம் ஜியோ ஃபைபர்

ஜியோ ஃபைபர் ஏழு வகையில் தனது திட்டங்களை வழங்குகிறது. அது ப்ரான்ஸ், சில்வர், கோல்ட், டைமண்ட், டைமண்ட் ப்ளஸ், பிளாட்டினியம் மற்றும் டைட்டானியம் ஆகும். ப்ரீமியம் ஜியோ ஃபைபர் டைட்டானியம் திட்டத்தில் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் 6.6 டிபி வரையிலான டேட்டாவை ஒரு மாதத்திற்கு வழங்குகிறது. அதோடு இதில் வரம்பற்ற குரலழைப்பு மற்றும் 12 ஓடிடி சலுகைகள் வழங்கப்படுகிறது.

நெட்ஃப்ளிக்ஸ் ப்ரீமியம் அணுகல்

நெட்ஃப்ளிக்ஸ் ப்ரீமியம் அணுகல்

ஓடிடி சலுகைகள் குறித்து பார்க்கையில் ஜியோ ஃபைபர் தனித்துவமாகவே விழங்குகிறது. ஜியோ ஃபைபர் பயனர்கள் மாதத்திற்கு ரூ.499 மதிப்புள்ள நெட்ஃபிளிக்ஸ், அதேபோல் ரூ.300 மட்டும் கூடுதல் கட்டணம் செலுத்தினால் நெட்ஃப்ளிக்ஸ் ப்ரீமியம் அணுகல் போன்றவையை வழங்குகிறது. ஆனால் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் திட்டத்தில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா நன்மை வழங்கவில்லை.

டயமண்ட் +, பிளாட்டினம் மற்றும் டைட்டானியம்

டயமண்ட் +, பிளாட்டினம் மற்றும் டைட்டானியம்

டயமண்ட் +, பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் போன்ற திட்டங்கள் வழக்கம்போல் மாதாந்திர அடிப்படையிலான சந்தா சலுகையில் கிடைக்கிறது. இருப்பினும், ரிலையன்ஸ் ஜியோ மாதாந்திர டயமண்ட்+ மற்றும் பிளாட்டினம் வாடிக்கையாளர்கள் ஸ்டாண்டர்ட் நெட்ஃபிக்ஸ் சந்தா அணுகலை பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Annouced JioFiber Broadband Plans Starting From Rs.399
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X