Jio + Redmi சேர்ந்து செஞ்ச வேலையை பார்த்தீங்களா? Redmi K50i 5G ரிசல்ட் சூப்பராம்ல! 2 பேரும் ஓவர் குஷி!

|

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இப்போது, நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ரெட்மி உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இந்த இரண்டு பெரிய நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து Redmi K50i 5G ஸ்மார்ட்போனின் சில திறன்களை சோதித்துப் பார்த்திருக்கிறது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. ரெட்மி நிறுவனத்திற்குச் சொந்தமான Redmi K50i 5G ஸ்மார்ட்போனை ஏன் ரெட்மி, ஜியோவுடன் கூட்டு சேர்ந்து சோதிக்க வேண்டும் என்று உங்களுக்குள் ஒரு சந்தேகம் எழுந்திருக்கும், வாங்க விஷயம் என்னனு பார்க்கலாம்.

ஜியோ + ரெட்மி கூட்டணி இதற்காக தானா?

ஜியோ + ரெட்மி கூட்டணி இதற்காக தானா?

ரெட்மி நிறுவனத்திற்குச் சொந்தமான Redmi K50i 5G ஸ்மார்ட்போனை வைத்து ஜியோ நேரடி 5G நெட்வொர்க் சோதனைகளைச் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. Redmi K50i 5G ஸ்மார்ட்போனின் திறன்களையும், 5ஜி செயல்திறனையும் சோதிக்கத் தீவிர நிலைமைகளின் கீழ் வைக்கப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சோதனை எதிர்பார்த்ததை விட மிகவும் நேர்மறையான முடிவுகளை வழங்கியுள்ளதாக இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. Redmi K50i 5G ஸ்மார்ட்போன் ஆனது MediaTek Dimensity 8100 சிப்செட் மூலம் இயங்குகிறது.

Redmi K50i 5G ஸ்மார்ட்போனின் சோதனை

Redmi K50i 5G ஸ்மார்ட்போனின் சோதனை

Redmi K50i 5G ஸ்மார்ட்போனின் சோதனையின் மூலம் நாட்டில் 5ஜி சேவைக்கான ஒரு நம்பிக்கைக்குரிய முடிவுகள் இப்போது கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் முடிவுகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை உண்மையாக்குவதற்கும், முழுமையான 5ஜி அனுபவத்தை உருவாக்குவதற்கும் உதவும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 5G சேவைகளுக்கான அணுகலை ஸ்மார்ட்போன் எப்படி அதிகரிக்கிறது என்பதும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

12 விதமான 5G பேண்டுகளுடன் சோதனை

12 விதமான 5G பேண்டுகளுடன் சோதனை

Redmi K50i ஸ்மார்ட்போன் ஆனது 12 விதமான 5G பேண்டுகளுடன் இயங்கும் என்பதை ரெட்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 12 விதமான 5G பேண்டுகளுடன் இயங்கும் முதல் Redmi சாதனமாக இந்த புதிய Redmi K50i ஸ்மார்ட்போன் இருக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. Redmi K50i ஸ்மார்ட்போன் ஆனது, n1, n3, n5, n7, n8, n20, n28a, n38, n40, n41 , n77, n78 போன்ற 12 விதமான 5ஜி பேண்டுகளுடன் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் ரெட்மி உடன் சேர்ந்து செய்யும் முதல் 5ஜி சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

'நீர்' ஆதாரங்களை வேற்று கிரகத்தில் கண்டறிந்த James Webb Space Telescope! இங்கு உயிர்கள் வாழ முடியுமா?'நீர்' ஆதாரங்களை வேற்று கிரகத்தில் கண்டறிந்த James Webb Space Telescope! இங்கு உயிர்கள் வாழ முடியுமா?

5G நெட்வொர்க் பெர்பார்மன்ஸ்

5G நெட்வொர்க் பெர்பார்மன்ஸ்

இந்த சோதனையானது ரெட்மி இந்தியாவின் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் 5G நெட்வொர்க் ஆகியவற்றுக்கு இடையேயான பெர்பார்மன்ஸ் அளவை மதிப்பீடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டு நிறுவனங்களும் எதிர்பார்த்திருந்த முடிவுகளை விட, சோதனை முடிவுகள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது என்று நிறுவனங்கள் கூறியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்து, Xiaomi India, CMO, Anuj Sharma என்ன கூறினார் என்பதை இப்போது பார்க்கலாம்.

Redmi K50i இன் 5G அம்ச சோதனை முடிவுகள்

Redmi K50i இன் 5G அம்ச சோதனை முடிவுகள்

Redmi India தொழில்நுட்பம் மூலம் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதில் ஒரு முன்னோடியாக இருக்கிறது. நாட்டில் உள்ள நுகர்வோருக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான அதன் சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த சோதனையின் மூலம், Redmi K50i இன் தயார்நிலை மற்றும் பயனர்களுக்கு அதிவேகமான மற்றும் நம்பகமான 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அவர்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக Reliance Jio உடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டு நிறுவனங்களும் குஷி

இரண்டு நிறுவனங்களும் குஷி

இந்த சோதனையின் மூலம் வெளிவந்த விளைவுகள் Redmi K50i ஸ்மார்ட்போனின் உண்மையான திறனை எடுத்துக்காட்டுகிறது. இது உயர்தர 5G அனுபவத்தை அதன் பயனர்களுக்கு மிகவும் நெருக்கமாக்குகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா 5ஜி அறிமுகத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த சோதனையின் முடிவுகள் மிகவும் சிறப்பாய் அமைந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏன் Asus ZenFone 9 போனுக்காக எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? விஷயம் 'இது' தான் பாஸ்!ஏன் Asus ZenFone 9 போனுக்காக எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? விஷயம் 'இது' தான் பாஸ்!

8K வீடியோ, 4K ஸ்ட்ரீமிங், கிளவுட் கேமிங் கூட டாப் ரிசல்ட்

8K வீடியோ, 4K ஸ்ட்ரீமிங், கிளவுட் கேமிங் கூட டாப் ரிசல்ட்

5ஜி சேவை சோதனையின் போது, அதிக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்துடன் ஈர்க்கக்கூடிய முடிவுகளை Redmi K50i காட்டியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், 5ஜி இணக்கத்துடன் 4K ஸ்ட்ரீமிங் மற்றும் கிளவுட் கேமிங் சோதனைகளில் கூட Redmi K50i அதன் வாக்குறுதியை நிறைவேற்றியதாக ரெட்மி கூறியுள்ளது. இது லேக்-இல்லாத ஆன்லைன் கேமிங் அனுபவத்தையும், 8K வீடியோக்களை பஃபர் இல்லாத ஸ்ட்ரீமிங்கையும் வழங்கியது என்பது கவனிக்கத்தக்கது.

Redmi K50i சிறப்பாகச் செயல்பட்டதா?

Redmi K50i சிறப்பாகச் செயல்பட்டதா?

இதுபோன்ற பல தீவிர நிலைமைகளின் கீழ் சோதிக்கப்பட்டபோது பிரமிக்கத்தக்க வகையில் Redmi K50i சிறப்பாகச் செயல்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. Redmi K50i ஆனது பயனர்களுக்கு வேகமான பெர்பார்மன்ஸ், அதிக செயல்திறன் மற்றும் 5Gக்கு அளவிடுதல் ஆகியவற்றை வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பயனரின் ஸ்மார்ட்போன் அனுபவத்தை உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி எப்போது அறிமுகம்?

இந்தியாவில் 5ஜி எப்போது அறிமுகம்?

ஜூலை 20, 2022 அன்று இந்தியாவில் Redmi K50i ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5ஜி இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற கேள்விக்கான பதில் என்னவாக இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். இந்திய நகரங்களில் உள்ள முக்கியமான நகரங்களில் மட்டும் முதற்கட்டமாக 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, வருகின்ற 2022 ஆம் ஆண்டில் 5G சேவையுடன் இணைப்பு கிடைக்கப்போகும் முக்கிய நகரங்களின் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

இந்த 13 நகரங்களில் தான் 5ஜி முதலில் கிடைக்குமா?

இந்த 13 நகரங்களில் தான் 5ஜி முதலில் கிடைக்குமா?

இந்த பட்டியலின் தகவல் படி, இந்தியாவின் முக்கிய நகரங்களான கொல்கத்தா, பெங்களூர், குருகிராம், புனே, காந்திநகர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், லக்னோ, சென்னை, அகமதாபாத், சண்டிகர் மற்றும் ஜாம்நகர் ஆகிய 13 நகரங்களுக்கு முதலில் 5ஜி சேவை கிடைக்கப்போகிறது. தற்போது நடத்தப்படும் 5G சோதனைகளை வைத்து, 6G உடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஆரம்ப ஆராய்ச்சியை விரைவில் இந்தியா துவங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி-யை தொடர்ந்து இந்தியா விரைவில் 6ஜி-க்கு விரைவில் முன்னேறும் என்று கூறப்படுகிறது.

5ஜி ரெடி இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு

5ஜி ரெடி இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு

ஜியோ தவிர, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியத் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒதுக்கிய அலைக்கற்றையைப் பயன்படுத்தி நாடுகளின் பல்வேறு பகுதிகளில் 5G சோதனைகளை நடத்தி வருகின்றது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் பாதியில் 5ஜி இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio and Redmi Partnered To Test 5G Capabilities Of The Redmi K50i 5G Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X