ஜியோ, பாரதி ஏர்டெல் & வோடபோன் ஐடியாவில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்!
ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அதிக டேட்டா பயன்படுத்தும் பயனர்களுக்காகப் பல சிறப்புச் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களின் விபரம் மற்றும் அவற்றின் விலை பட்டியலைத் உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களில் முதலாவதாக இருப்பது ரூ.398 திட்டம் தான். இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டம்
தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் ஏர்டெல் திட்டங்களில் இரண்டாவது திட்டமாக இருப்பது ரூ.588 திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என்று 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களில் முதலாவதாக இருப்பது இந்த ரூ.398 திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அனைத்து நெட்வொர்க் குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கி வருகிறது. இத்துடன் இந்த திட்டத்தில் வோடபோன் ப்ளே ஆப் மற்றும் ZEE5 சேவைகளுக்கான இலவச சந்தாவையும் வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.558 ப்ரீபெய்ட் திட்டம்
தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் வோடபோன் ஐடியா திட்டங்களில் இரண்டாவது திட்டமாக இருப்பது ரூ.558 திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அனைத்து நெட்வொர்க் குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என்று 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்துடன் இந்த திட்டத்தில் வோடபோன் ப்ளே ஆப் மற்றும் ZEE5 சேவைகளுக்கான இலவச சந்தாவையும் வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் பட்டியலில் இதுவரை ஒரே ஒரு திட்டம் மட்டும் தான், தினமும் 3 ஜிபி டேட்டா பயனை வழங்கி வருகிறது. தினமும் 3 ஜிபி வழங்கும் ஜியோ திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி அளவிலான டேட்டா, ஜியோ டூ ஜியோ எண்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், ஜியோ அல்லாத எண்களுக்கு 1000 நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ஜியோவின் இலவச சலுகை
இத்துடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல உள்ளிட்ட ஜியோ சூட்டிற்கான இலவச சேவையும் கிடைக்கிறது. 3 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் இந்த இலவச சலுகைகளை ஜியோ பயனர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








