ஜியோ மக்களே உங்களுக்கு செம ட்ரீட் ரெடி..5ஜி போன்.. 5ஜி பிளான்.. 5ஜி ஃபைபர் விபரங்கள் லீக்..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) அதன் 46வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்கான தேதியை வெளியிட்டுள்ளது. இந்த ரிலையன்ஸ் ஏஜிஎம் மீட் (Reliance AGM Meet) இல், புதிய ஜியோ 5ஜி பிளான் விபரம், ஜியோ போன் 5ஜி மற்றும் ஜியோ ஏர் பைபர் திட்டங்களை அறிவிக்கவுள்ளது.
இந்த மாத இறுதியில் ரிலையன்ஸ் ஏஜிஎம் மீட் நடைபெறும் என்றும், இதன் தலைவர் முகேஷ் அம்பானி பன்முகப்படுத்தப்பட்ட குழுமத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பானி புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றி அறிவிக்க AGM தளத்தைப் பயன்படுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஏஜிஎம் 2023 பற்றி எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்: ரிலையன்ஸ் ஏஜிஎம் 2023 ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் ரிலையன்ஸ் AGM மீட் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் (YouTube) மூலம் மதியம் 2 மணி IST இல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர மற்ற விபரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஏஜிஎம் 2023ல் என்ன எதிர்பார்க்கலாம்: ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பட்டியல் தேதி அறிவிப்பைத் தவிர, முகேஷ் அம்பானி ஜியோ 5ஜி திட்டங்கள் (Jio 5G Plan) மற்றும் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் (Jio Phone 5G) தொடர்பான சில அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜியோ நிறுவனம் ஜியோ ஏர் பைபர் (Jio Air Fiber) திட்டங்களை பற்றியும் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ 5ஜி திட்டங்கள்: ஜியோ 5G சேவைகள் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நகரங்களில் ஏற்கனவே கிடைக்கின்றன, 2024 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், Jio இன்னும் அதன் 5G திட்டங்களை அறிவிக்கவில்லை..பயனர்கள் தற்போதுள்ள 4G திட்டங்களில் 5G சேவைகளைப் பயன்படுத்த முடியும். இறுதியாக 5G திட்டங்களை வெளிப்படுத்த நிறுவனம் AGM 2023 கட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த கால அறிக்கைகளின்படி, ஜியோ 5G திட்டங்கள் தற்போதைய 4G திட்டங்களைப் போலவே இருக்கும் என்றும், இதன் கட்டணங்கள் 4ஜி திட்டங்களை போலவே சிறிய விலை அதிகரிப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பயன்படுத்தக்கூடிய தரவு மற்றும் பிற நன்மைகளும் பல மாற்றங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜியோ போன் 5ஜிகடந்த கடந்த 2020 ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானி, நாட்டில் மலிவு விலையில் 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த, ஜியோ கூகுளுடன் கூட்டு சேர்ந்ததாக அறிவித்தார். இந்த ஜியோ 5ஜி ஸ்மார்ட்ஃபோனைப் பற்றிய விபரங்களை நிறுவனம் சைலெண்டாக வைத்துள்ளது. ஜியோ 5G ஸ்மார்ட்போன் டிசம்பர் 2022 இல் Geekbench இல் Snapdragon 480+ சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 12 OS உடன் காணப்பட்டுள்ளது. இந்த போனின் நேரடி படங்கள் ஜூன் மாதத்தில் லீக் ஆகின.

ஜியோ ஏர் ஃபைபர்: கடந்த ஆண்டு ஏஜிஎம்மில் ஏர் ஃபைபர் 5ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை ஜியோ அறிவித்தது, ஆனால் இந்த தயாரிப்பு வாங்குவதற்கு இன்னும் கிடைக்கவில்லை. ஜியோ ஏர் ஃபைபரின் இந்தியா விலை மற்றும் கிடைக்கும் தன்மை இந்த மாத இறுதியில் 2023 ஏஜிஎம்மில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஏர் ஃபைபர் என்பது வீடு அல்லது அலுவலகத்தில் வயர்லெஸ் ஃபைபர் போன்ற 5G வேகத்தை வழங்குவதற்கான அதி-அதிவேக 5G ஹாட்ஸ்பாட் சாதனமாகும்.
இந்த வருடம் ஜியோ பயமார்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜியோ பயனர்களுக்கு 5ஜி திட்டங்கள் இனி தனி விலை பட்டியலிடலாம் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 5ஜி இனி மிகவும் மலிவு விலையில், அனைவரும் அணுக கிடைக்கும் என்று கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications








