Just In
- 1 hr ago
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- 7 hrs ago
ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!
- 8 hrs ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
- 8 hrs ago
உஷார்- 2000 "சியோமி" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி?
Don't Miss
- Movies
தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்!
- News
ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முகேஷ் அம்பானியுடன் எப்படி ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பொதுக் கூட்டத்தை நேரலை பார்ப்பது!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை இன்று காலை 11:00 மணி அளவில் துவங்குகிறது.
இந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மேலும் வணிக ரீதியான ஜியோ ஜிகாஃபைபர் வெளியீடு மற்றும் ஜியோபோன் 3 சாதனத்தின் அறிமுகம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு நிகழ்ச்சியையும் எப்படி நேரலை காண்பது
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நடத்தும் இந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தின் முழு நிகழ்ச்சியையும் இம்முறை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களில் நேரலை காணலாம். கடந்த ஆண்டு போலவே இம்முறையும் முகேஷ் அம்பானியின் Jio பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் நேரலை காணலாம்.

யூடியூப் தளத்தில் நேரலை காண்பது எப்படி?
யூடியூப் தளம் மூலம் நேரலை காண விரும்புவோருக்கும் அதிகப்படியான விருப்பங்களை ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது. Flame of Truth மற்றும் Jio அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரலையைத் தடை இல்லாமல் காணலாம். இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இன் அதிகாரப்பூர்வ Jio சேனல் பக்கத்திலும் நேரலை காணலாம்.
கால் டிராப் பிரச்சனையா? உடனடியாக டிராயிடம் புகார் தெரிவிப்பது எப்படி?

ஜியோபோன் 3
இன்று நடைபெறும் ஜியோவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ஜியோ நிறுவனம் ஜியோபோன் 2 சாதனத்தின் அடுத்த மேம்படுத்தப்பட்ட ஜெனெரேஷன் மாடலான புதிய ஜியோபோன் 3 சாதனத்தை வெளியிடக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மாடலா அல்லது பியூச்சர் போன் மாடலா?
ஜியோபோன் 3 பற்றிய நம்பகமான முழு விபரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஜியோபோன் 3 மாடல் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் அண்மையில் வெளியான தகவலின்படி ஜியோபோன் 3 பியூச்சர் போன் மாடலாக தான் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்க சார்ஜர் கேபிள்களை பாதுகாப்பாக கையாள இவற்றை எல்லாம் செய்ய முடியும் என தெரியுமா?

ஸ்மார்ட் பியூச்சர் போன் ஜியோபோன் 3
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யும் இந்த புதிய ஜியோபோன் 3 சாதனம், ஸ்மார்ட் பியூச்சர் போன் என்பது குறிப்பிடத்தக்கது. மீடியா டேக் சீப்புடன் கூடிய KaiOS இயங்குதளத்துடன் இந்த புதிய சாதனம் இன்று அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜியோ ஜிகாஃபைபர் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு நடைபெற்ற ஜியோவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இருப்பினும் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையின் விரிவாக்கப்பட்ட வெளியீட்டை முழுமையாக இன்னும் ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை.
வாட்ஸ் அப் செயலியில் விரைவில் 'பூமராங்' போன்ற வசதி!

ஜிகாஃபைபர் சேவைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜியோ சில நகரங்களில் மட்டும் ஜியோ ஜிகாஃபைபர் சேவையைத் தொடங்கி அதன் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது, இருப்பினும் இந்த சேவையை தற்பொழுது பயனர்கள் நேரடியாகப் பெறுவதற்கு, எந்த ஒரு அதிகாரப்பூர்வமான வழிகளையும் ஜியோ அறிமுகம் செய்யவில்லை. ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வைப்பு தொகை எவ்வளவு தெரியுமா?
தற்போதுள்ள ஜியோவின் முன்னோட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை ஜியோ இலவசமாக வழங்கிவருகிறது. ஜியோவின் முன்னோட்ட வாடிக்கையாளர்கள் ஜிகாஃபைபர் சேவையைப் பெறுவதற்குத் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்பு தொகையாக ரூ.4500 அல்லது ரூ.2500 வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1500 விலை குறைப்புடன் இந்த பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸை எப்படி வாங்கலாம்?

ரூ.500 விலையில் புதிய ஜியோ ஜிகாஃபைபர் உண்மையா?
ஜியோ நிறுவனம் இன்று புதிய ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை ரூ.500 என்ற துவக்கத் திட்டத்துடன் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துவக்க திட்டத்தில் பயனர்களுக்கு 300ஜிபி டேட்டாவுடன் கூடுதல் 100ஜிபி இலவச டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஹோம் ஐபிடிவி சேவை
அண்மையில் கசிந்த தகவலின்படி, ஜியோ மூன்று புதிய காம்போ திட்டத்தை ரூ.500 என்ற விலையின் கீழ் துவங்கி பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் ஐபிடிவி சேவையுடன் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ டிரிபிள் ப்ளே திட்டம் பற்றிய விபரங்களும் கசிந்துள்ளது, இதில் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா, ஜியோ ஹோம் ஐபிடிவி சேவை மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம்: வேறலெவல் வசதியுடன் களமிறங்கும் கூகுள் மேப்ஸ்.!

ஜிகாஃபைபர் சந்தா திட்டங்கள்
ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் ஜியோ நிறுவனம் மூன்று சந்தா திட்டங்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அடிப்படை மற்றும் மிகவும் மலிவு திட்டமாக, பயனர்களுக்கு 100Mbps இல் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.
- இரண்டாவது திட்டத்தில் இந்த சேவைகளுடன் ஐபிடிவி சேவைக்கான அணுகலும் கிடைக்கும்.
- மூன்றாவது மற்றும் உயர்தர திட்டத்தில் பிராட்பேண்ட் சேவை, ஐபிடிவி சேவை மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவைகள் பயனர்களுக்கு வழங்கப்படும்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090