மைஜியோ அப்ளிகேஷனுக்கு வாய்ஸ் அசிஸ்டெண்ட்டாக உதவ 'ஹலோஜியோ' இணைப்பு: இந்தி, ஆங்கிலம் என இரண்டிலும் பேசலாம்

|

மைஜியோ அப்ளிகேஷனில் சுவாரஸ்சியமான ஒரு புதிய அம்சத்தை தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைத்துள்ளது தெரியவந்துள்ளது. 'ஹலோஜியோ' என்று அழைக்கப்படும் இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சம், பயனர்களுக்கான நவீன மைஜியோ மேம்பாடாகவெளியிடப்பட்டுள்ளது.

மைஜியோ அப்ளிகேஷனுக்கு வாய்ஸ் அசிஸ்டெண்ட்டாக உதவ 'ஹலோஜியோ' இணைப்பு

முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோஃபோன் உடனான தனது சொந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட்டை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் தற்போது மைஜியோ அப்ளிகேஷன் உடன் மிகவும் சுவாரஸ்சியமான ஒரு அம்சமான ஹலோஜியோ அசிஸ்டெண்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

மைஜியோ அப்ளிகேஷனில் உள்ள இந்த 'ஹலோஜியோ' வாய்ஸ் அசிஸ்டெண்ட்டை, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பயன்படுத்த முடியும். இதுதவிர, இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு முதல் முறையாக தனது ஸ்மார்ட்போன் உடன் இந்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹலோஜியோ திரையின் வலது கீழ்புறத்தில் காணப்படும் ஒரு கட்டத்தைப் பயன்படுத்தி, மொழிகளை எளிதாகவும் விரைவாகவும் மாற்றி கொள்ளலாம்.

மைஜியோ அப்ளிகேஷனின் முகப்பு திரையின் மேற்பகுதியில் இருந்து இந்த புதிய ஹலோஜியோ வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சத்தை அணுக முடியும். ஜியோ அப்ளிகேஷன்கள் பிரிவில் மேற்பகுதியின் வலதுபுறத்தை ஒட்டி ஒரு ஸ்பீக்கர் ஐகான் உள்ள டெப் காணப்படுகிறது. இந்த ஸ்பீக்கர் தேர்வை கிளிக் செய்வதன் மூலம் பயனருக்கு ஹலோஜியோ வாய்ஸ் அசிஸ்டெண்ட் முகப்பு திரைக்கு செல்ல முடியும்.

மலிவு விலையில் வோடபோன் அறிமுகப்படுத்தும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்.!மலிவு விலையில் வோடபோன் அறிமுகப்படுத்தும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்.!

மைஜியோ அப்ளிகேஷனை நவீன பதிப்பாக மேம்படுத்தினால் மட்டுமே, இந்த வசதியை பயனர்கள் பெற முடியும்.

இந்த புதிய அம்சத்தின் மற்ற சிறப்புகளாக, ரிலையன்ஸ் ஜியோவின் இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் நீங்கள் எழுப்பும் கேள்விகளைக் கேட்க தயாராக உள்ளது. இதற்கு கூடுதலான குரல் பயிற்சி எதுவும் தேவையில்லை. அதே நேரத்தில், வாய்ஸ் அசிஸ்டெண்ட் தானாக இயங்க அல்லது செயல்பட முடியாத தன்மை மட்டுமே இதன் பின்னடைவாக கூறலாம். ஒவ்வொரு முறையும் பயனர் கையால் இயக்க வேண்டும்.

ஜியோ மூலம் ஒரு மிதக்கும் ஐகான் அளிக்கப்பட்டாலும், அது பயனர்களின் முகப்பு திரைக்கு இணைக்கப்பட உள்ளது. இதை அழுத்தி பிடிப்பதன் மூலம் பயனர்களால், ஹலோஜியோ அசிஸ்டெண்ட் திரையைச் சென்றடையலாம்.

ஹலோஜியோ அசிஸ்டெண்ட் மூலம் நடத்தப்படும் பெரும்பாலான செயல்பாடுகளும் கோரிக்கைகளும், மைஜியோ அப்ளிகேஷனின் செயல்பாட்டிற்கு உட்பட்டதாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, ரிசார்ஜ் தொடர்பான செயல்பாடுகள் அல்லது சலுகைகளின் தகவல்கள், ஜியோ அப்ளிகேஷனை துவக்குவது, மீதமுள்ள டேட்டா அளவு, அமைப்பு அலாரம்கள், இசையை இசைப்பது உள்ளிட்ட சிலவற்றை கூறலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio has now reportedly added an interesting new feature to its MyJio app.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X