ரிலையன்ஸ் ஜியோவில் 7 வினாடிக்கு ஒரு வாடிக்கையாளர்: முகேஷ் அம்பானி

ஜியோவின் வளர்ச்சி உலகின் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்கைப் ஆகியவைகளின் வளர்ச்சியைவிட குறைவுதான்: அம்பானி .

By Siva
|

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4G ஜியோ சேவை ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு 7 வினாடிக்கும் ஒரு வாடிக்கையாளர் இணைந்து கொண்டிருப்பதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி பெருமையுடன் கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோவில் 7 வினாடிக்கு ஒரு வாடிக்கையாளர்: முகேஷ் அம்பானி

இந்த வளர்ச்சி உலகின் எந்தவொரு டெக்னாலஜியிலும் இருந்ததில்லை,. குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்கைப் உள்ளிட்டவைகளில் கூட இதைவிட குறைவுதான் என்பதை அம்பானி சுட்டிக்காட்டினார்.

ஜியோ அறிமுகமாகும் முன் LTE உலகின் ஒரு வெற்றிகரமான மாடல் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் அதை நாங்கள் தவறு என நிரூபித்துள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்

ரிலையன்ஸ் ஜியோவில் 7 வினாடிக்கு ஒரு வாடிக்கையாளர்: முகேஷ் அம்பானி

இன்று ஜியோவுக்கு 125 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்

ஜீயோ அறிமுகமான ஆறே மாதங்களில் இந்தியாவில் இண்டர்நெட் டேட்டா உபயோகத்தின் அளவு 20 கோடி GBயில் இருந்து 120 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி இன்னும் அதிகரித்து கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டுமே மாதம் ஒன்றுக்கு 125 கோடி GB டேட்டாவை பயன்படுத்தி வருவதாகவும், ஒவ்வொரு மாதம் 165 கோடி மணி நேரம் வீடியோக்கள் மாதந்தோறும் பார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் இந்தியாவில் வீடியோ பார்க்கும் அளவு அமெரிக்கா மற்றும் சீனாவை விட அதிகரித்துள்ளது என்பதையும் அவர் பெருமையுடன் கூறினார்.

ரிலையன்ஸ் ஜியோவில் 7 வினாடிக்கு ஒரு வாடிக்கையாளர்: முகேஷ் அம்பானி

ஜியோ அறிமுகமாவதற்கு முன்னர் மொபைல் பிராண்ட்பேண்ட் உபயோகிப்பதில் இந்தியா 155வது இடத்தில் இருந்ததாகௌவ்ம், ஜியோவிற்கு பின்னர் இந்தியா முதல் இடத்தை பெற்றுள்ளதாகவும் கூறிய அம்பானி, இந்த அளவு இன்னும் வரும் மாதங்களில் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோவில் 7 வினாடிக்கு ஒரு வாடிக்கையாளர்: முகேஷ் அம்பானி

மேலும் எக்னாமிக் டைம்ஸ் கருத்தின்படி முதல் காலாண்டில் ஜியோ 14 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் ஜியோ போனையும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போன் சுமார் 50 கோடி பேர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் இந்த போன் வாங்குபவர்களுக்கு வாய்ஸ்கால் மற்றும் எஸ்.எம்.எஸ் இலவசம் என்றும் ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுவதாஅக்வும், ஆனால் வாடிக்கையாளர்கள் ரூ.1500 மட்டும் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் மூன்று வருடங்களுக்கு பின்னர் அந்த பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Best Mobiles in India

Read more about:
English summary
The company has also launched its feature phone i.e JioPhone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X