ஜியோ நிறுவனத்தின் 6பைசா கட்டணம்: இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? எவ்ளோ நாட்கள் நீடிக்கும்?

|

ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, குறிப்பாக ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு இலவச நன்மைகளை வழங்கி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இலவச அழைப்புகள்

பின்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரம்பற்ற இலவச அழைப்புகள் கிடையாது,என்று கூறி மற்ற நெட்வொர்க்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது நிமிடத்திற்கு சரியாக 6பைசாகட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது.

 ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

அதன்பின்பு ஜியோ நிறுவனம் மீது பல்வேறு கருத்துகள் மற்றும் வெறுப்புகள் மக்களிடையே வரத் தொடங்கியதுஎன்றுதான் கூறவேண்டும். ஆனால் இதை சரியாக பயன்படுத்திய மற்ற டெலிகாம் நிறுவனங்கள் வரம்பற்றஇலவச அழைப்பு நன்மைகளை வழங்குகிறோம் என்று விளம்பரம் செய்யத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்தது: நான்கு ரியர் கேமரா.! முழுவிவரங்கள்.!நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்தது: நான்கு ரியர் கேமரா.! முழுவிவரங்கள்.!

 எந்த அறிவிப்புகள் வெளியாகவில்லை

எந்த அறிவிப்புகள் வெளியாகவில்லை

மேலும் இந்த 2020புத்தாண்டுக்கு பின்னர் 6பைசா என்கிற அழைப்பு கட்டணத்தை ஜியோ வசூலிக்காது எனக்கூறப்பட்டது, ஆனால் ஜனவரி மாதம் கூட முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்ட பின்பும் கூட ஜியோநிறுவனம் சார்பில் எந்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.

மேலுமொரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

மேலுமொரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் ஜியோநிறுவத்தின் IUC அழைப்பு கட்டணங்கள் ஆனது அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தற்சமயம் டெலிகாம் டால்க் வலைதளம் வெளியே தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் செய்யும் ஒவ்வொரு அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவது மேலுமொரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஐ.யூ.சி IUC

ஐ.யூ.சி IUC

இந்த ஐ.யூ.சி IUC என்பது ஒரு ஆபரேட்டரால் மற்றொரு ஆபரேட்டருக்கு அழைப்பை நிகழ்த்துவதற்கு செலுத்தப்படுகிறது, உதரணமாக ஏர்டெல் நம்பரில் இருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பு வந்தால், ஏர்டெல் அழைப்பை மேற்கொண்டதாக ஜியோவிற்கு நிமிடத்திற்கு 6பைசா ஐ.யூ.சி கட்டணம் கிடைக்கும். ஆனால் ஜியோ பெரும்பாலான சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான மாறியபோது தான் ஒரு சிக்கல் வந்தது.

Elon Musk உருவாக்கிய புதிய பேங்கர் EDM டிராக்! லிஸ்டில் இது புதுசா இருக்கே!Elon Musk உருவாக்கிய புதிய பேங்கர் EDM டிராக்! லிஸ்டில் இது புதுசா இருக்கே!

வருவாய் வெகுவாக

அது ஜியோ நெட்வொர்க்கில் இருந்து வெளிச்செல்லும் அழைப்புகள் நிறைய நடக்கத் துவங்கின, ஆகவே ஜியோஇப்போது ஐ.யூ.சி கட்டணங்களை பெறுவதை விட அதிகமாக செலுத்த வேண்டிய நிலைமை வந்துவிட்டது, இதனால்அதன் வருவாய் வெகுவாக குறைந்தது.

 6பைசா

6பைசா

பின்னர் தொலைத் தொடர்புத் துறையில் உள்ள அனைத்து ஒழுங்குமுறைகளையும் மேற்பார்வையிடும் இந்தியதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் zero-IUC regime சாத்தியமாகவில்லை, கடைசியானஜியோ பயனர்கள் செய்யம் அழைப்புகளுக்கு 6பைசா என்கிற கட்டணமானது வசூல் செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio 6 Paise Per Minute Call Charge Extend one More Year: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X