Home
News

சொன்னதை செய்யும் அம்பானி! இனி மொத்த தலைநகரமும் Jio கட்டுப்பாட்டில்: ரெடியா இருங்க.!

Reliance Jio 5ஜி சேவை சுமார் 50 இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ ட்ரூ 5ஜி சேவையை பயனர்கள் இலவசமாகவே பயன்படுத்தலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஜியோ 5ஜி சேவை

ஜியோ 5ஜி சேவை

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 மத்திய பிரதேசங்களின் முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெரும்பாலான தலைநகரங்களில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் ஜியோ 5ஜி சேவையை கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக பயன்படுத்தலாம்.

5ஜி சேவையில் நடக்கும் போட்டி

5ஜி சேவையில் நடக்கும் போட்டி

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டராக இருக்கும் ஜியோ, 5ஜி நெட்வொர்க் சேவையை நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனமும் 5ஜி சேவையில் ஜியோவுக்கு இணையான போட்டியை வழங்கி வருகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்று.

50க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை

50க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இலவசமாக தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவில்லை. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 2 மாதங்களுக்குள் சுமார் 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைப்பை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து இரண்டு நிறுவனங்களும் முணைப்போடு செயல்பட்டு வேகமாக 5ஜி சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இலவசமாக ஜியோ 5ஜி சேவை

இலவசமாக ஜியோ 5ஜி சேவை

ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை ஆனது "ஜியோ ட்ரூ 5ஜி" என அழைக்கப்படுகிறது. ஜியோ ட்ரூ 5ஜி சேவையை நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களின் தலைநகரங்களில் ஜியோ 5ஜி சேவைக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. அதாவது ஏறத்தாழ ஜியோ 5ஜி சேவை இந்தியாவின் 50 நகரங்களுக்கு மேல் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இந்த பகுதியில் உள்ளவர்கள் ஜியோ ட்ரூ 5ஜி சேவையை இலவசமாகவே பயன்படுத்தலாம்.

ஜியோ 5ஜி பயன்படுத்த நிபந்தனைகள்

ஜியோ 5ஜி பயன்படுத்த நிபந்தனைகள்

ரிலையன்ஸ் ஜியோவின் 45வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கும் என ஜியோ உறுதி அளித்தது. அதன்படி ஜியோ தற்போது PAN இந்தியா 5ஜி கவரேஜ் இலக்கை செயல்படுத்தி வருகிறது.

ஜியோ 5ஜி சேவையை பயனர்கள் இலவசமாகவே அனுபவிக்கலாம். இதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருக்கிறது. அது ஜியோ பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் இருக்க வேண்டும் என்பது தான். தற்போது பயன்படுத்தும் 4ஜி சிம் மூலமாகவே 5ஜி சேவையை பயனர்கள் பயன்படுத்தலாம். கூடுதலாக ரீசார்ஜ் செய்யக் கூட தேவையில்லை, 5ஜி ஸ்மார்ட்போனும் 5ஜி கிடைக்கும் பகுதியிலும் மட்டும் இருந்தால் போதும்.

ரூ.239க்கு மேல் ரீசார்ஜ் செய்வது கட்டாயம்

ரூ.239க்கு மேல் ரீசார்ஜ் செய்வது கட்டாயம்

மற்றொரு நிபந்தனையும் இருக்கிறது. ஜியோ 4ஜி சிம் மூலமாகவே ஜியோ ட்ரூ 5ஜி சேவையை பயன்படுத்தலாம். ஆனால் ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது மிகவும் கட்டாயமாகும்.

அதேபோல் குறிப்பிட்ட 5ஜி பேண்ட்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி சேவை கிடைக்கும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. ஆனால் விரைவில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி சேவைக் கிடைக்கத் தொடங்கும். காரணம் இதற்கான அப்டேட்டை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அந்தந்த ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடத் தொடங்கிவிட்டன.

Jio 5G சேவைகள் கிடைக்கும் பகுதிகள்

Jio 5G சேவைகள் கிடைக்கும் பகுதிகள்

டெல்லி

மும்பை

வாரணாசி

கொல்கத்தா

பெங்களூரு

ஐதராபாத்

சென்னை

நாத்வாரா

புணே

குருகிராம்

நொய்டா

காஜிதாபாத்

ஃபரிதாபாத்

மற்றும் குஜராத்தின் அனைத்து 33 மாவட்ட தலைமையகங்களிலும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல்

ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல்

Vodafone Idea (Vi) மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்னும் இந்தியாவில் தங்களது 5ஜி சேவைகளை தொடங்கவில்லை. இந்த இரண்டு நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை தொடங்கலாம் என கூறப்படுகிறது.

எது எப்படியோ, அதிவிரைவாக 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதியில் இருந்தால் 5ஜி இணைப்பை பெறுவதற்கு 5ஜி ஸ்மார்ட்போன் என்பது கட்டாயம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவசமாக 5ஜி சேவையை வழங்கி வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Reliance Jio 5G Available Cities Expanded: How to Activate Jio True 5G in Your Smartphone?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X