Home
News

ரூ.999/-க்கான ஜியோ 4ஜி போன் புகைப்படம் லீக் ஆனது.!

இக்கருவியின் டிஸ்ப்ளேவிற்கு கீழே அதாவது கீபேட்டிற்கு மேலே நான்கு பொத்தான்கள் இருப்பதையும் அது மைஜியோ, ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோமியூசிக் ஆகிய ஆப்ஸ்களின் அணுகலை முன்னிலை படுத்துவதை காண முடிகிறத

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.999/-ல் இருந்து ரோ.1,500/- என்ற விலை நிர்ணயத்திற்கு இடையிலேயான 4ஜி கருவியை அறிமுகம் செய்யப்போவதாக வதந்திகள் உலவுகின்றன. அதை உறுதி செய்யும் வண்ணம் ஒரு அநாமதேய ஆதாரத்தில் இருந்து ஒரு புகைப்படம் கிடைக்கப் பெற்றுள்ளது.

அந்த புகைப்படத்தில் உள்ள கருவி ஒரு ரிலையன்ஸ் ஜியோ வோல்ட் அம்சம் கொண்ட தொலைபேசியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வெளியாகியுள்ள லீக் புகைப்படத்தில் இருந்து என்னென்ன அறியப்படுகிறது மற்றும் எதிர்பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி கருவியில் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

நான்கு பொத்தான்கள்

நான்கு பொத்தான்கள்

வெளியாகியுள்ள புகைப்படத்தில் இருந்து எதிர்பார்க்கபப்டும் கருவி சார்ந்த எந்த அம்சங்கள் சார்ந்த தகவலும் அறியபபடவில்லை என்பது ஒருபக்கமிருக்க இக்கருவியின் டிஸ்ப்ளேவிற்கு கீழே அதாவது கீபேட்டிற்கு மேலே நான்கு பொத்தான்கள் இருப்பதையும் அது மைஜியோ, ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோமியூசிக் ஆகிய ஆப்ஸ்களின் அணுகலை முன்னிலை படுத்துவதை காண முடிகிறது.

செயலி

செயலி

முந்தைய அறிக்கைகளின் படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இந்த் 4ஜி எல்டிஇ அம்சம் ஆனது குறைந்த-கட்டணத்தில் செயல்படுத்தப்படும் வண்ணம் செயலிகளை பொருத்தமட்டில் க்வால்காம் மற்றும் மீடியா டெக் சிப் உற்பத்தியாளர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.999/- மற்றும் ரூ.1,500/-

ரூ.999/- மற்றும் ரூ.1,500/-

ஆய்வாளர்கள் படி, ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த 4ஜி கருவிகளின் விலை ரூ.999/- மற்றும் ரூ.1,500/- ஆகிய விலைகளுக்கு இடையே இருக்கலாம். இந்த வோல்ட் போன்கள் சந்தைக்கு வந்த பின்னர் பீச்சர் கருவிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மேம்படுத்தல்களுக்கு மாறாக பீச்சர் கருவிகளில் இருந்து வோல்ட் கருவிகளுக்கான மேம்பாடு நிகழும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருவியின் அம்சங்கள்

கருவியின் அம்சங்கள்

2017-ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையின் மிகபெரிய சவாலாக கருதப்படும் இந்த கருவியின் அம்சங்களை பொருத்தமட்டில் முன்பக்க மற்றும் பின்புற கேமிராக்கள் இடம்பெறும் வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது, ஆனால் வெளியாகியுள்ள லீக் புகைப்படத்தில் முன்பக்க கேமிரா இடம்பெறவில்லை.

தனிப்பட்ட விற்பனை புள்ளி

தனிப்பட்ட விற்பனை புள்ளி

உடன் பணமில்லா பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வண்ணம் ஜியோ மணி ஏன டிஜிட்டல் வேலட் ஆப்பும் இக்கருவிகளில் உள்ளடக்கமாக இருக்கலாம். மற்றும் வோல்ட் ஆதரவு எச்டி வாய்ஸ் கால் ஆதரவு மற்றும் வீடியோ கால் ஆகிய அம்சங்கள் தான் இக்கருவியின் தனிப்பட்ட விற்பனை புள்ளியாக ரிலையன்ஸ் ஜியோ நிர்ணயிக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

அதிவேக 4ஜி அணுகல்

அதிவேக 4ஜி அணுகல்

மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் அபார வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழும் இலவச வரம்பற்ற குரல் மற்றும் வீடியோ அழைப்பு, வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அதிவேக 4ஜி அணுகல் ஆகியவைகளும் இக்கருவிகளில் கிடைக்க வாய்ப்புள்ளது.

எப்போது தொடங்கப்படும்

எப்போது தொடங்கப்படும்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த மிக மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள் எப்போது தொடங்கப்படும் என்ற எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இக்கருவி வெளியானல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் தொலைத் தொடர்பு சந்தையில் பிற போட்டியாளர்களுக்கான மேலும் பல இடையூறுகளை நிர்வகிக்கும் என்பது மட்டும் உறுதி.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்களின் தற்போதைய நம்பரை ஜியோவிற்கு போர்ட் செய்வது எப்படி.?

புகைப்படம் : கேஜெட்ஸ்360

Best Mobiles in India

English summary
Reliance Jio 4G VoLTE-Enabled Feature Phone Purported Image Leaked. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X