Just In
- 24 min ago
கண்ணீர் சிந்தும் சியோமி போன் பயனர்கள்: அவசரப்பட்டு புது 5ஜி போன் வாங்காதீங்க!
- 25 min ago
சூரியனில் விழுந்த ஓட்டை.! வெறும் கண்ணுக்கே தெரிகிறதா? ஆபத்தில் பூமி.! பீதியில் விஞ்ஞானிகள்.!
- 27 min ago
Republic Day Sale: வெறும் ரூ.9449 க்கு HD TV.. 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் Xiaomi டிவிகள் மீதும் ஆபர் மழை!
- 30 min ago
Airtel ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மிட்டல் பரபர தகவல்.!
Don't Miss
- Finance
ஐரோப்பாவில் பட்டைய கிளப்பும் டிசிஎஸ்.. இது வேற லெவல் சம்பவம்..!
- Sports
"என் நிம்மதியே போச்சு; தூங்கவே விடல" இரட்டை சதத்திற்கு முன் இஷான் செய்த சேட்டை.. கில் சுவாரஸ்ய தகவல்
- Automobiles
ஆசை ஆசையாய் நடிகர் அமிதாப்பச்சன் வாங்கிய கார்!! டெல்லியில் தற்போது அலங்கோலமாக... காரணம் இதுதான்!
- News
ஈரோடு கிழக்கு முக்கியமான இடைத்தேர்தல்..போட்டியிடும் வேட்பாளர் யார்.. ஜி.கே.வாசன் சூசக தகவல்
- Movies
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் கலக்கக் கூடாது.. கமலுக்கு கோரிக்கை வைத்த வனிதா விஜயகுமார்!
- Lifestyle
ஆண்கள் எந்த வயதில் செக்ஸ் வாழ்க்கையில் உச்சத்தை அடைகிறார்களாம் தெரியுமா? நீங்க நினைக்கிற வயதில் அல்ல!
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!
ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனம் இப்போது தினசரி 1 ஜிபி டேட்டா, 2 ஜிபி டேட்டா மற்றும் 3 ஜிபி டேட்டா திட்டங்களை வழங்கி வருகிறது. என்ன தான் நிறுவனம் 3 வெவ்வேறு டேட்டா வரம்புகளில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கினாலும், மக்கள் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை தான் அதிகமாக ரீசார்ஜ் செய்கிறார்கள்.

ஜியோவிடம் இருந்து அதிகம் ரீசார்ஜ் செய்யப்பட்ட பெஸ்டான ரீசார்ஜ் திட்டங்கள்
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 2 ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், SMS போன்ற நன்மைகள் உடன் கூடுதல் சேவையாக JioTV, JioCinema மற்றும் JioSecurity போன்ற பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இப்படி, ஜியோவிடம் இருந்து தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும் பெஸ்டான ரீசார்ஜ் திட்டங்களை பற்றிப் பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 249 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.249 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இது 46 ஜிபி மொத்த மொபைல் டேட்டாவை வழங்குகிறது. ஆம், இந்த ரீசார்ஜ் திட்டம் 23 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.

எக்ஸ்ரா நன்மைகள் என்ன தெரியுமா?
இந்த ரூ. 249 திட்டத்துடன் வரும் உங்கள் FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) வரம்பை எட்டியவுடன் உங்கள் டேட்டா வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தச் ரீசார்ஜ் பிளான் மூலம் வாடிக்கையாளர்கள் Jio TV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற இலவச நன்மைகளையும் அணுகலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 299 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 திட்டத்தில் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி மொபைல் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக 56 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 SMS நன்மைகளை கொண்டுள்ளது.

2 ஜிபி-க்கு பிறகு டேட்டா வேகம் குறையுமா?
ஜியோவின் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் ஒரு மாத டேட்டாவை இந்த திட்டம் கம்மி விலையில் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு ஒதுக்கப்பட்ட 2ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, பயனர்களின் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது. இத்துடனும், Jio TV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற இலவச நன்மைகளும் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 533 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 533 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 56 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. 2 மாதங்களுக்கு சேர்த்து ரீசார்ஜ் செய்ய விரும்புவோர் இந்த திட்டத்தைக் கருத்தில் கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் மொத்தம் 112 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) வரம்பு.!
உங்கள் ரீசார்ஜ் திட்டத்துடன் வழங்கப்பட்டிருக்கும் FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) டேட்டா வரம்பு அனைத்தையும் நீங்கள் பயன்படுத்திய பிறகு, உங்கள் டேட்டா வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த திட்டமும் Jio TV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற இலவச நன்மைகளை சேர்த்து வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 719 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களால் நன்கு விரும்பப்பட்ட பேக்கேஜ் என்றால், அது இந்த ரூ. 719 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தான். இது 84 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன், தினசரி 100 SMS நன்மைகளுடன் வருகிறது.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ்!
உங்கள் FUP வரம்புக்குப் பிந்தைய டேட்டாவின் வேகம் இந்தத் திட்டத்துடன் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டமும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் பிற போன்ற Jio பயன்பாடுகளுக்கான சந்தாவுடன் வருகிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2879 திட்டம்
இறுதியாக ஜியோவிடம் இருந்து கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ. 2879 ஆகும். இந்த திட்டம் உங்களுக்கு 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆம், இது 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் நீண்ட கால ரீசார்ஜ் திட்டமாகும். இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு மொத்தமாக 730 GB டேட்டாவை வழங்குகிறது.

1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் திட்டம்.!
இருப்பினும், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, டேட்டாவின் வேகம் 64 Kbps ஆக குறைகிறது. கூடுதலாக, இந்த தொகுப்பில் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வழங்குகிறது.

தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டத்தின் விலை என்ன?
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் இப்போது ஜியோவின் இணையதளம் வழியாகவும், ஜியோ ஆப்ஸ் வழியாகவும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இத்துடன், நிறுவனம் தினசரி 1 ஜிபி டேட்டா கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள், தினசரி 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் என்று பல திட்டங்களை வழங்குகிறது. தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டம் ரூ. 419 விலை முதல் துவங்குகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470