Subscribe to Gizbot

ரூ.5000/-க்கு ஜியோ 4ஜி லேப்டாப் : அமோகமாக தொடங்கிய 'டூப்ளீக்கேட்' விற்பனை.!

Written By:

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 4ஜி சேவையை தொடங்கியதுடன் நில்லாமல் அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கொண்டு வேலை செய்யும் மிக மலிவு 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்களான லைஃப் போன்களையும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையில் ஜியோ அதன் ஜியோஃபை மற்றும் ஜியோலின்க் என்ற அதன் 4ஜி மிஃபை மற்றும் வைஃபை ரவுட்டர்களை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து விரைவில் ஜியோ முத்திரை கொண்ட 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட பீச்சர் கருவிகளை நிறுவனம் வெளியிடவும் திட்டமிட்டுள்ள நிலையில், அத்துடன் நில்லாமல் ஜியோ அதன் ஜியோ கார் கனெக்ட் மற்றும் ஜியோ டிடிஎச் சேவை ஆகிய பல ஜியோ சேவைகளை நாம் அனைவரும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் வேளையில் கடந்த மாதம் ஜியோ 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட மலிவான ஜியோ 4ஜி லேப்டாப் அறிமுகமாகவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகின.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விற்பனை

விற்பனை

அந்த தகவலுக்கு பின்னர் வேறெந்த ஜியோ 4ஜி லேப்டாப் பற்றியும் எங்களுக்கு தகவல்கள் கிடைக்காத நிலையில் இன்று ஜியோ 4ஜி லேப்டாப் முன்பதிவு சார்ந்த இணைப்பு ஒன்று சிக்கியது. ஜியோ 4ஜி லேப்டாப் பற்றிய எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக நிலையில் இது முற்றிலும் போலியான விற்பனை என்பதை ஆரம்பத்திலேயே அறிந்துகொண்டோம்.

சீக்கிரம் முன்பதிவு செய்யுங்கள்

சீக்கிரம் முன்பதிவு செய்யுங்கள்

கிடைக்கப்பெற்ற அந்த இணைப்பில் உங்கள் வீடு தேடிவரும் ஜியோ லேப்டாப் என்றும், 1டிபி ஹார்ட்வேர் மற்றும் 4 ஜிபி ரேம் லேப்டாப் உங்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி முறையில் கிடைக்கும் என்றும், பின் குறிப்பாக, சீக்கிரம் முன்பதிவு செய்யுங்கள் ஏற்கனவே 1.2 மில்லியன் பயனர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் என்பது வெளிப்படை

ஊழல் என்பது வெளிப்படை

பின்னர் அந்த வலைதளம் உங்களின் பெயர், விலாசம், மொபைல் எண், உங்கள் மாவட்டம் சார்ந்த தகவலை கேட்கிறது. இதுவொரு ஊழல் என்பது வெளிப்படை. ஆக யாரும் இந்த இணைப்பில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம்.

ஜியோ 4ஜி லேப்டாப்

ஜியோ 4ஜி லேப்டாப்

இதற்கு முன்பு வெளியான, அதாவது ஏப்ரல் முதல் வாரம் ஜியோ 4ஜி லேப்டாப் தகவலின் கீழ் சுற்றுச்சூழல் அமைப்பை மிகவும் பன்முகத்தன்மைக்கு கொண்டுவரும் முனைப்பிலான ஜியோவின் புதிய தயாரிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதாவது ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 4ஜி லேப்டாப் உருவாக்கும் சார்ந்த பணிகளில் ஈடுபடுகிறது.

இணைப்பு

இணைப்பு

எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் விரைவில் நம் கைகளில் ஜியோ முத்திரை பதித்த மடிக்கணினிகல் கிடைக்கும். இந்த வழக்கில் நீங்கள் ஜியோ மற்றும் அதன் மடிக்கணினி ஆகிய இரண்டிற்கும் இடையே இணைப்பு இருக்குமா என்ற கேள்வியை எழுப்பினால் ஆம் இருக்கும் என்கிறது வெளியான தகவல்.

ஃபாக்ஸ்கான்

ஃபாக்ஸ்கான்

அதாவது இந்த புதிய லேப்டாப் ஒரு பிரத்யேக 4ஜி சிம் கார்டு ஸ்லாட் கொண்டு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சீன ஸ்மார்ட்போன்களின் மாறுபாடுகளான லைஃப் ஸ்மார்ட்போன்கள் போன்று இது இல்லாமல் இந்த ஜியோ 4ஜி மடிக்கணினி ஃபாக்ஸ்கான் மூலம் தயாரிக்கப்படவுள்ளதாவகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

4ஜி சிம் கார்டு ஸ்லாட்

4ஜி சிம் கார்டு ஸ்லாட்

கடந்த டிசம்பரில் சியோமி அதன் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட மேம்படுத்தப்பட்ட மி நோட்புக் ஏர் லேப்டாப்களை அறிமுகம் செய்தது என்பதும், இந்த ஜியோ 4ஜி மடிக்கணினி இடது பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு 4ஜி சிம் கார்டு ஸ்லாட் கொண்டு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் பதிப்பு

விண்டோஸ் பதிப்பு

இந்த பரிசோதனை மாறுபாட்டில் விண்டோஸ் 10 ஓஎஸ் இறுதி தயாரிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தால் ஜியோ ஆப்ஸ் தொகுப்பு கொண்ட விண்டோஸ் பதிப்புடன் இந்த லேப்டாப் வெளியாகலாம்.

மெலிந்த கீபோர்ட்

மெலிந்த கீபோர்ட்

13.3 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) கொண்ட 16:9 என்ற காட்சி விகிதம் கொண்டு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த லேப்டாப் ஆனது வீடியோ அழைப்புகளுக்கான எச்டி கேமராவும் கொண்டிருக்கும். உடன் நம்பர்பேட் இல்லாத ஒரு பிரத்யேக மெலிந்த கீபோர்ட் கொண்டு வெளிவரலாம்.

சேமிப்பு

சேமிப்பு

12.2மிமீ தடிமன் கொண்டு குளிர்வூட்டும் விசிறி இல்லாமல் மெக்னீசியம் அலாய் உடல் கொண்டு வெளியாகும் இந்த லேப்டாப் வெறும் 1.2கிலோ கிராம் எடையுள்ளதாக இருக்கும். உடன் இது இன்டெல் பென்டியம் க்வாட் கோர் செயலி மற்றும் 4ஜிபி ரேம் மற்றும்128ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு மற்றும் 64ஜிபி இஇஎம்சி சேமிப்பு கொண்டு வரலாம்.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

4ஜி எல்டிஇ தவிர ப்ளூடூத் 4.0, 2 யூஎஸ்பி 3.0 போர்ட்கள், மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவரலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ vs ஏர்டெல் தோற்றுப்போகலாம் அதற்காக இப்படியா தோற்றுப்போவது?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Reliance Jio 4G laptop pre booking at Rs.5000 Its a scam.! Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot