இந்த அறிக்கை ஜியோ வாடிக்கையாளர்களை ஏர்டெலுக்கு மாற்றும்.!

|

மிகவும் குறைந்த விலையில் தரவுத் திட்டங்களை வழங்கி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகவும் குறைந்த வேகத்தில் இண்டர்நெட்டை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஓப்பன்சிக்னல் (OpenSignal) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, "ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில், சராசரியான அளவில் குறைவான 4ஜி எல்டிஇ வேகத்தை வழங்குகிறது, ஆனால் அதே நேரத்தில் ஜியோ நெட்வொர்க் இரண்டாவது சிறந்த "சராசரி உச்ச வேகத்தை" இணையத்தை வழங்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

3.9எம்பிபிஎஸ் 4ஜி எல்டிஇ வேகம்

3.9எம்பிபிஎஸ் 4ஜி எல்டிஇ வேகம்

நெட்வொர்க் தரத்தை மதிப்பீடு செய்யும் லண்டனை அடிப்படையாகக் கொண்ட இணைய நிறுவனம் ஆன ஓப்பன்சிக்னல், கவரேஜ் பகுதியின் மதிப்பீட்டின் கீழ் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரியான 4ஜி எல்டிஇ வேகம் 3.9எம்பிபிஎஸ் என்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 2016 மற்றும் பிப்ரவரி 2017 இடையிலான முடிவு

டிசம்பர் 2016 மற்றும் பிப்ரவரி 2017 இடையிலான முடிவு

மற்றும் ஜியோவின் சராசரியான உச்ச வேகம் அதாவது நெட்வொர்க் உகந்த நிலையில் செயல்படும் போது - 50எம்பிபிஎஸ் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2016 மற்றும் பிப்ரவரி 2017 இடையிலான முடிவுகளை இந்த சோதனை காட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேகம் உகந்ததாக இல்லை

வேகம் உகந்ததாக இல்லை

பெரும்பாலான நேரங்களில், சந்தாதாரர்கள் உச்ச வேகத்தைப் பெற இயலவில்லை என்பதையும் ஓப்பன்சிக்னல் உறுதிப்படுத்துகிறது. அதாவது, ஜியோ வழங்கும் டேட்டா அளவை முழுமையாக அனுபவிக்கும் வண்ணம் ஜியோ நெட்வர்க்கின் வேகம் உகந்ததாக இல்லை என்ற முக்கியமான காரணத்தை ஓப்பன்சிக்னல் சுட்டிக்காட்டுகிறது.

குறைபாட்டை சுட்டிககாட்டுகிறது

குறைபாட்டை சுட்டிககாட்டுகிறது

கடுமையான பயன்பாடானது எந்த நெட்வொர்க்கின் பயனர்களையும் ஒருவருக்கொருவர் அலைவரிசைக்கு விரோதமாக செய்லபட கட்டாயப்படுத்தும். எங்களின் ஆய்வு குறிப்பிடுவது ஜியோவின் மெதுவான சராசரி 4ஜி வேகத்தை அல்ல, மாறாக ஒரு திறன் குறைபாட்டை சுட்டிககாட்டுகிறது" என்கிறது ஓப்பன்சிக்னல் அறிக்கை.

சராசரி உச்ச வேகமானது

சராசரி உச்ச வேகமானது

"ஜியோவின் தினசரி வேகம் மற்றும் அதன் உகந்த வேகங்களுக்கிடையேயான பெரிய வித்தியாசம் இருக்கிறது" என்றும் ஓப்பன்சிக்னல் அறிக்கை கூறுகிறது. ஒப்பீட்டில் ஜியோ 50எம்பிபிஎஸ் வேகமும் ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களின் சராசரி உச்ச வேகமானது முறையே 56.9எம்பிபிஎஸ், 36.5எம்பிபிஎஸ் மற்றும் 29.8எம்பிபிஎஸ் என்பதாக இருக்கிறது.

மூன்று மடங்கு அதிக வேகத்தை

மூன்று மடங்கு அதிக வேகத்தை

வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய சேவை நிறுவனங்கள் ஜியோவைவிட இரண்டு மடங்கு வேகமாக சராசரி எல்டிஇ வேகங்களை வழங்குகின்றன. மறுபக்கம் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக வேகத்தை வழங்குவதாக ஓப்பன்சிக்னல் அறிக்கை தெரிவிக்கிறது.

டிராய் அறிக்கை

டிராய் அறிக்கை

இந்த கூற்று இணைய வேகம் பரிசோதனையை நிகழ்த்தும் பிரபல இணைய நிறுவனமான ஓக்லாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் டிராய் அறிக்கையோ ரிலயன்ஸ் ஜியோ வேகமான பதிவிறக்க வேகத்தைக் கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கிறது.

பல வேக சோதனை

பல வேக சோதனை

கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை என மூன்று மாதங்களுக்கு 93,464 பயனாளர்களின் தரவுகளை சேகரித்து இந்த அறிக்கையை ஓப்பன்சிக்னல் தயாரித்துள்ளது. இந்த ஆய்வில் பயனாளர்களிடமிருந்து கிடைக்கும்த்தன்மை, வேகம் மற்றும் மறைநிலைத் தரவு ஆகிய பொதுவான விவரங்கள் சேகரிக்கப்பட்டாலும், உச்ச வேக பகுப்பாய்வுக்கு மூன்று மாத காலத்திற்குள் பல வேக சோதனைகளை மேற்கொண்ட சாதனங்களில் மட்டுமே கவனம் செலுத்தபட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio 4G Average Speeds Worst in India, Airtel the Fastest: OpenSignal. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X