Jio-க்கு வருது 3 ஆப்ஷன்.. 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 5ஜி டேட்டா.. எந்த திட்டங்கள்?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு 3 ஜிபி டேட்டா (3GB Data) வேண்டுமானால், அவர்களுக்கு மூன்றே மூன்று திட்டங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால், 4ஜி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) இவற்றில் கிடைக்கின்றன. கூடவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
4ஜி டேட்டா சேவைக்கு பிறகு ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டாலாம் போதாதுங்க, மினிமம் 1.5 ஜிபி வேண்டும்.. 2.5 ஜிபி இருந்தா தாராளமாக யூஸ் பண்ணலாம் என்று சொல்லும் நிலைமை வந்துவிட்டது. ஏனென்றால், அவ்வளவு டேட்டாவை டெலிகாம் கஸ்டமர்கள் பயன்படுத்தி பழகிவிட்டனர். இவர்களில் 3 ஜிபி டேட்டாவை கேட்கும் கஸ்டமர்களுக்கு பின்வரும் திட்டங்கள் பக்கா ஆப்ஷனாகும்.

ஜியோ ரூ 449 திட்டம் (Jio Rs 449 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஆரம்ப விலை 3 ஜிபி டேட்டா திட்டமாகும். ஆகவே, இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் சலுகைகள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 84 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது 4ஜி வேகத்தில் கிடைக்கும் டேட்டா சலுகையாகும். 5ஜி டேட்டாவும் இருக்கிறது.
4ஜிக்கு பிறகு அன்லிமிடெட் 5ஜி டேட்டவையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு பொருந்தும். இந்த ரூ.499 மதிப்பிலான திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை பெற்று கொள்ள முடியும். 100 எஸ்எம்எஸ் தினமும் கிடைக்கிறது.
இந்த சலுகைக்கு பிறகு ஜியோ ஆப்களின் சந்தாவின் கீழ் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) தளங்கள் பயன்படுத்த கிடைக்கின்றன. இதைவிட கூடுதல் வேலிடிட்டி வேண்டுமானால், ரூ.1199 மதிப்பிலான திட்டத்துக்கு ஜியோ கஸ்டமர்கள் செல்லலாம். இந்த திட்டத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு டேட்டா சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
ஜியோ ரூ 1199 திட்டம் (Jio Rs 1199 Plan): இந்த 3 ஜிபி டேட்டா திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கு நாள்தோறும் 3 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே இதற்கும் 4ஜி டேட்டாவுக்கு பிறகு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.
அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகைகளும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகளும் தினமும் செய்து கொள்ள கிடைக்கிறது. இதில் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கிறது. இதுபோக ஜியோ டிவி, ஜியோ சினிமா ஆப்களை பெற்று கொள்ளலாம். இப்போது, அதிகப்படியான விலைக்கு கிடைக்கும் 3 ஜிபி டேட்டா திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜியோ ரூ 1799 திட்டம் (Jio Rs 1799 Plan): இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், நெட்பிளிக்ஸ் சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, முந்தைய திட்டத்தின் சலுகைகள் இதற்கும் பொருந்தும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 5ஜி டேட்டாவை 84 நாட்களுக்கு பெறலாம். 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








