ஜியோவின் புதிய 2 மற்றும் 3 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள்.! அன்லிமிடெட் சேவை.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குப் பல சலுகைகளை வழங்கி வருகிறது. குறைந்த விலையில் தனது பயனருக்குக் கூடுதல் டேட்டா சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குப் பல சலுகைகளை வழங்கி வருகிறது. குறைந்த விலையில் தனது பயனருக்குக் கூடுதல் டேட்டா சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.

5 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோ நிறுவனத்தின் வலைத்தள விபரங்களின்படி 5 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் இரண்டு முதல் மூன்று ஜிபி வரையிலான டேட்டா சேவையை 28 நாட்களை முதல் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கியுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினமும் 2 அல்லது 3 ஜிபி வரை டேட்டா கிடைக்கும் புதிய திட்டங்களின் பட்டியல் இங்கே.

ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின்படி தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் உடன் சேர்த்து மொத்தமாக 56 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் படி, ஜியோ பயனர்களுக்குத் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் உடன் சேர்த்து 2ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் படி, ஜியோ பயனர்களுக்குத் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் உடன் சேர்த்து 2ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா 91 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின்படி தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.

ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்:
ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டப் பட்டியலின் கீழ் ஒரே ஒரு திட்டத்திற்கு மட்டுமே தினமும் 3 ஜிபி டேட்டா சேவையை வழங்கியுள்ளது. இந்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின்படி ஜியோ பயனர்களுக்குத் தினமும் 3ஜிபி டேட்டா சேவையுடன் கூடுதலாகத் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications