Home
News

வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அள்ளித் தெளிக்கும் ரிலையன்ஸ்

By Super
வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அள்ளித் தெளிக்கும் ரிலையன்ஸ்

இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் ரிலையான்ஸ் நிறுவனத்திற்கு கணிசமான அளிவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது தமது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது ரிலையனஸ்.

இந்த புதிய திட்டத்திற்கு எஸ்டிவி யூத் பேக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ரூ.24 செலுத்தி இந்த திட்டத்தைப் பெறலாம். இந்த புதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்களோடு போனில் இலவசமாக பேசலாம். இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்பலாம். அதோடு இன்டர்நெட்டையும் இலவசமாக பயன்படுத்தலாம்.

மேலும் இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், இதே திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களோடு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக போனில் பேசலாம்.

மேலும் பகல் நேரத்தில் பேசினால் 6 வினாடிகளுக்கு 1 பைசா செலுத்தினால் போதுமானது. மேலும் ஒரு நாளைக்கு 199 லோக்கல் மற்றும் தேசிய அளவிலான எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம். அதுபோல் ஒரு மாதத்திற்கு 250எம்பி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக இந்த புதிய திட்டம் கல்லூரி மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் அதே நேரத்தில் விலை குறைந்ததாகவும் இருக்கும். மேலும் இந்த புதிய திட்டத்தை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றோடு இணைக்கும் திட்டத்திலும் ரிலையன்ஸ் மும்மரமாக இருக்கிறது.

இந்த திட்டத்தைத் தொடர்ந்து டொக்கோமோ, ஏர்டெல், ஐடியா போன்ற மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் புதிய மலிவு விலைத் திட்டங்களை அறிவிக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X