ஊழியர்களின் சம்பளத்தை 10 முதல் 50சதவிகிதம் குறைக்க ரிலையனஸ் முடிவு?

|

கொரோனா வைரஸ் உலகில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது,மேலும் இந்த வைரஸ் கட்டுப்படுத்த மத்திய அரசு போட்ட உத்தரவு வணிகங்களை கடுமையாக தாக்கியுள்ள நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது பெரும்பாலான ஊழியர்களின் சம்பளத்தை 10 முதல் 50சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.

மற்றும் இணைக்கப்பட்ட சலுகைகளை

இந்நிறுவனத்தின் தலைவரும் இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியும் தனது ஊதியம் அனைத்தையும் கைவிடஒப்புக் கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆயில்-டு-டெக்னாலஜி கூட்டு நிறுவனம் பணியாளர் அறிக்கையின்படிமுதல் காலாண்டில் பொதுவாக செலுத்தப்படும் வருடாந்திர ரொக்க போனஸ் மற்றும் செயல்திறன் மற்றும்
இணைக்கப்பட்ட சலுகைகளை ஒத்தி வைக்கபட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தொடங்கிய நாடு தழுவிய

கடந்த மார்ச் 25-ம் தேதி தொடங்கிய நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதும், அலுவலகங்கள்மூடப்பட்டதும், விமானங்கள் நிறுத்தப்பட்டதும், ரயில்கள் நிறுத்தப்பட்டதும், மக்கள் நடமாட்டத்திற்கு மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், தேவையும் குறைந்து விட்டது, மறுபுறம் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

பூமியும் நிலவும் ஒரே நேரத்தில் காட்சியளிக்கும் ஆச்சரியமூட்டும் காணொளி!பூமியும் நிலவும் ஒரே நேரத்தில் காட்சியளிக்கும் ஆச்சரியமூட்டும் காணொளி!

சம்பளக் குறைப்பு

மேலும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள் மற்றம் பெட்ரோ கெமிக்கல்களுக்கான தேவை குறைக்கப்பட்டதால் ஹைட்ரோகார்பன் வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவின் தலைவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு முடிவு குறித்து கடிதம் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.15கோடி இழப்பீட்டை

அம்பானி அவர்கள் தனது ரூ.15கோடி இழப்பீட்டை கைவிடும்போது, நிர்வாக இயக்குநர்கள்,
நிர்வாக குழு (இ.சி) உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட ரிலையன்ஸ் வாரிய இயக்குநர்கள் தங்களதுஇழப்பீட்டில் 30முதல் 50சதவிகிதம் வரை கைவிடுவார்கள் எனத் தெரிகிறது.

வருமானம் பெருகிறார்

பின்பு ரூ.15 லட்சத்துக்கும் குறைவான வருமானம் பெரும் ஊழியர்களுக்கு இழப்பீட்டில் குறைப்பு இருக்காது, ஆனால் அதைவிட அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு நிலையான ஊதியத்தில் 10சதவிகிதம் குறைப்பு காணப்படுகிறது. மேலும்
இந்தியாவின் மிகப்பெரிய நிறுலனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்ததற்காக அம்பானிஆண்டுக்கு 15கோடி ரூபாய் ஈட்டுகிறாரர், 2008-09முதல் அவரது சம்பளம் மாறாமல் உள்ளது, ஆண்டுக்கு ரூ.24கோடிக்கு மேல் வருமானம் பெருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதர மற்றும் வணிகச்

மேலும் நாங்கள் பொருளாதர மற்றும் வணிகச் சூழலை உன்னிப்பாகக் கண்காணிப்போம் நிலைமைக்கான தொடர்சியான அடிப்படையில மறு மதிப்பீடு செய்வோம், மேலும் எங்கள் வணிகத்தின் வருவாய் திறனை மேம்படுத்த முயற்சிப்போம்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டது.உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் செலவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை உருவாக்க வணிக செயல்முறைகளை மறுசீரமைக்க மற்றும் டிஜிட்டல் மயமாக்க பல வாய்ப்புகளை ஊரடங்கு காலம் வழங்கியுள்ளது.

 காலங்களில் சுறுசுறுப்புடன்

இந்த சவாலான காலங்களில் சுறுசுறுப்புடன் இயங்காவும், தொழில் தலைவர்களாகவும், சிறந்த திறமைகளை வளர்ப்பதற்காகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Reliance Industries announces pay cuts, Mukesh Ambani to forgo entire compensation: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X