முகேஷ் அம்பானி வாங்கிய புதிய ஹோட்டல்.! எங்கு தெரியுமா? என்ன விலை?

|

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் பார்க் எனும் கிளப்பை வாங்கினார் முகேஷ் அம்பானி. அதாவது
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரிசார்ட் தான் இந்த ஸ்டோக் பார்க். குறிப்பாக அழகான தோட்டங்கள், கோல்ப் மைதானம், 49 ஆடம்பர அறைகள், பூங்கா, உணவகம் என பல வசதிகளை கொண்டுள்ளது இந்த தங்கும் விடுதி.

ஸ்டோக் பார்க் வாங்கியது அப்போது

குறிப்பாக ஸ்டோக் பார்க் வாங்கியது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் முகேஷ் அம்பானி தற்போதுஅமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற மாண்டரியன் ஓரியண்டல் நியூயார்க் என்ற ஹோட்டலை வாங்யுள்ளதாகதகவல் வெளிவந்துள்ளது.

 தகவலின் அடிப்படையில் அமெரிக்காவின்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் இருக்கும் சென்ட்ரல் பார்க் அருகே இந்தபிரம்மாண்ட மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க் நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த2003 ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் சுமார் 248 அறைகள், நடன விடுதிகள், ஸ்பா மற்றும் மதுபானகூடங்கள் போன்ற பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Xiaomi 11T Pro ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. இது 'ஹைப்பர்போன்'.. அப்படினா என்ன தெரியுமா?Xiaomi 11T Pro ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. இது 'ஹைப்பர்போன்'.. அப்படினா என்ன தெரியுமா?

அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள், ஹாலி

குறிப்பாக அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருவது வழக்கம்என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும்ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க் ஹோட்டலின் 73.37 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.இதற்காக 730 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன்டா பேரு வச்சது குற்றமா?- அவரது பெயர் காரணமாக டுவிட்டரில் உலகப் புகழ்: பேர கேட்டா நெருங்க மாட்றாங்க!ஏன்டா பேரு வச்சது குற்றமா?- அவரது பெயர் காரணமாக டுவிட்டரில் உலகப் புகழ்: பேர கேட்டா நெருங்க மாட்றாங்க!

போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டல்,

அதேபோல் போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டல், போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஸ்பா போன்ற பல விருதுகளை வெற்றுள்ளது இந்தஹோட்டல். இந்தியாவில் டாட்டா குழுமம் ஏற்கனவே நட்சத்திர ஹோட்டல் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு
வருகிறது. இதேபோல் சர்வதேச அளவிலான ஹோட்டல் தொழிலில் ரிலையன்ஸ் நிறுவனமும் ஆர்வம் காட்டுவதாகதெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் சில ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம்.

ஜியோ ரூ.2999 ரீசார்ஜ் திட்ட பலன்கள்

ஜியோ ரூ.2999 ரீசார்ஜ் திட்ட பலன்கள்

ஜியோ ரூ.2999 திட்டமானது நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 912.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் உள்ளிட்ட பல இலவச அணுகலை வழங்குகிறது.

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறுநன்மைகளை வழங்குகிறது.

 ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

 கூடுதல் டேட்டா சலுகை

கூடுதல் டேட்டா சலுகை

முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்யகிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். முன்பு ரூ.2599-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 10ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும்இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

.499 ப்ரீபெய்ட திட்டம் ஆனது தினசரி

ஜியோ ரூ.499 ப்ரீபெய்ட திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளையும் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர ரூ.499 ப்ரீபெய்ட் திட்டமானது Disney+ Hotstar அணுகலுடன் வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance has acquired a luxury hotel called Mandarin Oriental in New York: Specs, Features and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X