ரிலையன்ஸ் புதுவரவு : ரூ.10,999க்கு 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Meganathan
|

ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் லைஃப் பிரான்டின் கீழ் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லைஃப் வாட்டர் 8 என அழைக்கப்படும் இந்தக் கருவியும் மற்ற லைஃப் கருவிகளை போன்றே 4ஜி வோல்டிஇ 'VoLTE' தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்தக் கருவி இந்தியா முழுக்க இயங்கும் அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ.10,999 என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரை

திரை

இந்தக் கருவியில் 5 இன்ச் AMOLED எச்டி டிஸ்ப்ளே மற்றும் 294ppi வழங்கப்பட்டுள்ளது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

லைஃப் வாட்டர் 8 கருவியில் 13 எம்பி பிரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ் அம்சம் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு பிரைமரி மற்றும் செல்பீ கேமராக்களிலும் எல்இடி பிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

சுமார் 2600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் 4ஜி கனெக்ஷனில் தொடர்ச்சியாக 10 மணி நேர டாக்டைம் மற்றும் 320 மணி நேரம் ஸ்டான்ட்பை நேரம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

இதோடு VoLTE, LTE, ப்ளூடூத் 4.0, வை-பை, யுஎஸ்பி 2.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.

விலை

விலை

மொபைல் போன் சந்தையில் லைஃப் ஃபிளேம் சீரிஸ் போன்கள் ரூ.5,000க்கும் கீழ் கிடைக்கும் கருவிகளையும் லைஃப் வாட்டர் சீரிஸ் போன்கள் ரூ.7500 முதல் ரூ.15,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. 4ஜி மற்றும் வோல்டிஇ அம்சம் மற்ற கருவிகளுக்கு போட்டியாக அமைகின்றது.

போட்டி

போட்டி

லைஃப் வாட்டர் 8 கருவியின் அறிமுகம், கிட்டத்தட்ட ஒரே அம்சங்கள் கொண்டிருக்கும் சியோமி ரெட்மி நோட் 3 மற்றும் லீஇகோ லீ2 கருவிகளுக்கும் நேரடி போட்டியாக இருக்கும்.

வெளியீடு

வெளியீடு

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சிம் கார்டுகள் மற்ற கருவிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. தற்சமயம் வரை தேர்வு செய்யப்பட்ட சாம்சங் கருவிகளுக்கும், லைஃப் கருவிகளுக்கு மட்டுமே ஜியோ 4ஜி சேவை வழங்கப்படுகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Digital LYF Water 8 with 4G VoLTE launched at Rs 10,999 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X