ரிலையன்ஸ் டிஜிட்டல் சேல்;: குறைந்த விலையில் டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன்.!
குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10சதவீதம் உடனடி தள்ளுபடி அல்லது 10சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி பிளிப்கார்ட், அமேசான் போன்ற வலைத்தளங்களில் சுதந்திர தின சிறப்பு விற்பனை நடைபெறுகிறது, இதில் லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற பல மின்னணு சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த வலைத்தளங்களுக்கு போட்டியாக ரிலையன்ஸ் டிஜிட்டல் சார்பில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ரிலையன்ஸ் டிஜிட்டல் சார்பில் விடப்பட்ட இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள்.

ஆகஸ்ட் 15:
ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் வழங்கப்படும் இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜியோ ஸ்டோர்களில் பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்
முன்னனி நிறுவனங்களின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்,லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சவுன்ட் பார், ஆல்-இன்-ஒன் ப்ரின்டர் உள்ளிட்டவை தேர்வு சாதனங்களை வாங்குவோருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

10சதவீதம்
குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10சதவீதம் உடனடி தள்ளுபடி அல்லது 10சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

எச்டி டிவி
மேலும் இந்த ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியா விற்பனையில் எச்டி டிவி மாடல்கள் ரூ.10.990-என்ற ஆரம்ப விலையில் வாங்க முடியும். பின்பு வாஷிங் மெஷின்களின் துவக்க விலை ரூ.10,490 எனவும் பின்பு குளிர்சாதனப் பெட்டிகள் ரூ.11,490 முதல் கிடைக்கின்றன என்று ரிலையன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications