ரூ.3,499க்கு 4ஜி ஸ்மார்ட்போன் வெளியிட்டது ரிலையன்ஸ்..

Written By:

ரிலையன்ஸ் டிஜிட்டல் புதிய வகை லைஃப் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. லைஃப் Flame 7S என அழைக்கப்படும் இந்தக் கருவியின் விலை ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கருவியானது ரிலையன்ஸ்டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

ரூ.3,499க்கு 4ஜி ஸ்மார்ட்போன் வெளியிட்டது ரிலையன்ஸ்..

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை 4 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன், 480*800 பிக்ஸல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இதோடு ஆண்ட்ராய்டு லாலிலாப் 5.1 இயங்குதளம், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக மெமரியை 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

5 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கும் இந்தக் கருவியானது 1800 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை b/g/n,மைக்ரோ யுஎஸ்பி 2.0, 3.5 எம்எம் ஜாக் ஜிபிஎஸ், VoLTE, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ப்ளூடூத் 4.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சலுகையும் வழங்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
Reliance Digital launches 4G VoLTE enabled Lyf Flame 7S for Rs 3,499
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot