சென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.!
ஜியோ நிறுவனத்தின் Jio Oppo Monsoon Offer என்னும் புதிய அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் ஜியோஃபை ரூட்டருக்கான சலுகை அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் தயாரிப்புகள் நாடு முழுவதும் அதிக பிரபலமாகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும், மேலும் ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். குறிப்பாக இந்தியாவின் மின்சாதன நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் சென்னையில் மட்டும் 25 கிளைகளை நிறுவி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து
வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வி.ஆர்.மாலில் ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளை தொடங்கப்பட்டுள்ளது,மேலும் இதன் அறிமுக சிறப்பு சலுகையாக
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த கிளை திறக்கப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த பொருள்கள்:
மேலும் உலகத்தரம் வாய்ந்த பொருள்களை வாடிக்கையாளர்கள் வாங்க பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த கிளை
தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பல கேஷ்பேக ஆபர்கள் மற்றும் பரிசுப் பொருள்கள்
வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோஃபை
இதற்கு முன்புகணிப்பொறி இணைப்புகளுக்கு இடையே இணையத் தரவுகளை முன்னெடுத்துச் செல்லும் கம்பியில்லா இணைப்புக் கருவியான ஜியோஃபை (JioFi) 4G ரூட்டரின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக ஜியோ நிறுவனம்,
செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறும் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இச்சலுகையின்படி வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்திலிருந்து 500 ரூபாயைத் திரும்பப் பெற முடியும். இதன் காரணமாக ஜியோஃபை (JioFi) 4G ரூட்டரின் விலை 499 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அமேசான், ஃபிளிப்கார்ட்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜியோஃபை 4G ரூட்டரின் விலையை 1,999 ரூபாயிலிருந்து 999 ரூபாயாகக் குறைத்திருந்தது ஜியோ நிறுவனம்.
இந்தச் சலுகையைப் பெற வேண்டுமானால் புதியதாக ஜியோஃபை ரூட்டரை வாங்க வேண்டும். ஏற்கனவே வாங்கிய ரூட்டருக்கு இந்தச் சலுகை
வழங்கப்படாது. இந்தச் சலுகை ஜீலை 3 ஆம் தேதியிலிருந்து வழங்கப்படுகிறது. சலுகை முடிவு பெறும் கடைசித் தேதி அறிவிக்கப்படவில்லை.
ஜியோஃபை (JioFi) ரூட்டரை ஜியோ ஸ்டோர்கள் மற்றும் மின் வணிகத் தளங்களான, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவற்றின் மூலமாகவும் வாங்கலாம்.

500 ரூபாயைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் வாடிக்கையாளர்கள், ஜியோஃபை ரூட்டர் மற்றும் அதில் பயன்படுத்துவதற்கு ஏற்ற போஸ்ட்பெய்டு சிம் கார்டும் வாங்க வேண்டும். குறைந்தபட்சம் 199 ரூபாய் மதிப்புள்ள போஸ்ட் பெய்டு திட்டத்தில் இணைந்து 12 மாதங்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். 12 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் 500 ரூபாயைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தொகை பணமாக
வழங்கப்படாது, அதற்குப் பதிலாக அடுத்தடுத்த மாதங்களில் வரும் கட்டணத் தொகைகளில் கழித்துக் கொள்ளப்படும்.
ஜியோ போஸ்ட்பெய்டு 199 ரூபாய் திட்டத்தில், 25 GB டேட்டா, இலவச அழைப்புகள், கணக்கற்ற SMS பகிர்வுகள் மற்றும் ஜியோ செயலிகளுக்கான பிரிமியம் சந்தா போன்ற வசதிகள் உள்ளன.

செப்டம்பர் 25
ஜியோ நிறுவனத்தின் Jio Oppo Monsoon Offer என்னும் புதிய அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் ஜியோஃபை ரூட்டருக்கான சலுகை அறிவிப்பு வெளிவந்துள்ளது. Jio Oppo Monsoon Offer-ன்படி 4,900 ரூபாய் வரையிலான சலுகைகளைப் பெறலாம். இந்தச் சலுகை செப்டம்பர் 25 வரை செயல்பாட்டில் இருக்கும். 50 ரூபாய்க்கான கூப்பன்கள் 1800 ரூபாய் வரை வழங்கப்படும்.
MakeMyTrip வழங்கும் 1,300 ரூபாய்க்கான சலுகைக் கூப்பன்கள், ஜியோ மணி செயலியின் (Jio Money) வழியாக 36 மாதங்களுக்கு 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது 1,800 ரூபாய் திரும்பப் பெறும் வகையிலான சலுகை என 4,900 ரூபாய் வரையிலான சலுகைத் திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது

ரூபாய் 149 முதல் 799 ரூபாய் வரை
இதுமட்டும் அல்லாமல், ஜீன் மாதம் முதல் தினந்தோறும் கூடுதலாக 1.5 GB டேட்டா பயன்பாட்டு வசதியினை தன்னுடைய வாடிக்கையாளருக்கு ஜியோ வழங்கி வருகிறது. ரூபாய் 149 முதல் 799 ரூபாய் வரையுள்ள அனைத்துத் திட்டங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். இந்தத் திட்டங்களில்
எதில் இணைந்தாலும் தினந்தோறும் கூடுதலாக 1.5 GB டேட்டா பயன்பாட்டுச் சலுகை வசதியைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications