குடியரசு தின சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனம்.! முகேஷ் அம்பானியின் பலே திட்டம்.!

|

ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

 இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின்

மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தரைவரான முகேஷ் அம்பானி அவர்கள் தனது ரீடைல் வர்த்தகத்தை ஜியோமார்ட் வாயிலாக விரிவாக்கும் செய்து வரும் நிலையில், தனது ரிலையன்ஸ் டிஜிட்டல் அதாவது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையை மேம்படுத்தக் குடியரசு தின சிறப்பு தள்ளுபடி ஆஃபர் விற்பனையை அறிவித்துள்ளார்.

அதிகத் தள்ளுபடியும்

அதன்படி ரிலையன்ஸ் டிஜிட்டல் குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கம் போல் ப்ரீ புக்கிங் ஆஃபர்-ஐ அறிவித்துள்ளது. இம்முறை அதிகத் தள்ளுபடியும் இரட்டிப்பு லாபத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளது அந்நிறுவனம்.

iPhone 12 Mini வாங்க நல்ல சான்ஸ்.. அசல் விலையில் இருந்து ரூ.48,900 வரை விலை குறைத்து வாங்க முடியும்..iPhone 12 Mini வாங்க நல்ல சான்ஸ்.. அசல் விலையில் இருந்து ரூ.48,900 வரை விலை குறைத்து வாங்க முடியும்..

 ப்ரீ புக்கிங் காலகட்டத்தில்

ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ள தகவலின்படி, ஜனவரி 18-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரையிலான ப்ரீ புக்கிங் காலகட்டத்தில் மக்களுக்குப் பிடித்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை 1000 ரூபாய் முன்பணம் கொடுத்து புக் செய்ய வேண்டும்.

இப்படி புக் செய்பவர்களுக்கு கூடுதலாக 1000 ரூபாய் தள்ளுபடி கிடைப்பது மட்டும் அல்லாமல் உடனடி சலுகை மற்றும் சிறப்பு ஆபர்களும் ரிலையன்ஸ் டிஜிட்டல்-ன் டிஜிட்டல் இந்தியா சேல் எனும் சிறப்பு விற்பனையில் கிடைக்கும்

 தவணையில் அதாவது

மேலும் 2000 ரூபாய் முன்பணம் கொடுத்து புக் செய்வோருக்கு மாத தவணையில் அதாவது ஈஎம்ஐ-யில் கூடுதலாக 2000 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. குறிப்பாக இந்த சலுகை அனைத்தும் ஜனவரி 22 முதல் ஜனவரி 26-ம் தேதி வரையில் நடக்கும் டிஜிட்டல் இந்தியா சேல் சிறப்பு விற்பனையில் கிடைக்கும்.

முன்னணி வங்கிகள் மற்றும் நிதி

அதேபோல் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கொடுக்கும் சிறப்பு சலுகைகளும் இந்த டிஜிட்டல் இந்தியா சேல் விற்பனையில் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் 3000 ரூபாய்க்கும் அதிகமாகத் தள்ளபடியைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற முடியும். அதேபோல் புக்

குறிப்பாக பயனர்கள் இந்த ஆபர்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் மட்டும் அல்லாமல் www.reliancedigital.in

இணையதளத்திலும் பெற முடியும். அதேபோல் புக் செய்த பொருட்களை மக்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

வீட்டிற்கே பொருட்களை டெலிவரி பெற

பின்பு நேரடியாக வீட்டிற்கே பொருட்களை டெலிவரி பெற கூடிய வசதிகளும் உள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் சுமார் 800 நகரங்களில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Digital announces Republic Day offers: Here are the offers Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X