ரிலையன்ஸ் - ஏர்செல் கூட்டணி, செப்டம்பரில் ஒப்பந்தம்..!
இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் ஒரு இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இணைக்கப்படும் நிறுவனம் ஆனது 14,000 கோடி கடனை இடமாற்றம் செய்யும் நோக்கத்தில் 196 மில்லியன் பயனர்களை பூர்த்தி செய்யும் நோக்கம் கொண்டது என்று முந்தைய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2015 -16 நிதி ஆண்டு இறுதியில் 41,362.1 கோடி கடன் கொண்டுள்ளது மறுபக்கம் ஏர்செல் கடன் புள்ளி விபரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

இரண்டு நிறுவனங்க்ளுக்கு இடையிலே ஆன இணைப்பு உறுதியான ஒப்பந்தம் என்றும், இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலேயான சொற்கூறு படிவங்கள் தயாராகிவிட்டது, ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஒப்பந்தம் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய நிறுவனம் 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2300 மெகா ஹெர்ட்ஸ்களில் அடங்கும் அனைத்து அலைவரிசையை ஸ்பெக்ட்ரம் உரிமம் பெருகிறதாம். 7,000 கோடி செலவில் ஆரம்பிக்கும் இந்த புதிய நிறுவனத்தின் முதல் நாள் பணப்புழக்கமானது 25,000 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications