பொம்மை கம்பெனியை வாங்கினார் அம்பானி: பொம்மை விற்பனையில் புரட்சி செய்யுமா ரிலையன்ஸ்?

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஹாம்லேஸ் நிறுவனத்தை வாங்க முடிவு செய்து அதற்கானஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

|

ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் 250 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்
கையொப்பமிட்டுள்ளது என தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

பொம்மை கம்பெனியை வாங்கினார் அம்பானி.!

மத்திய லண்டனில் ரெகெண்ட் சாலையில் செயல்படும் ஹாம்லேஸ் பொம்மை நிறுவனம் உலகப்புகழ் பெற்றது, இந்நிறுவனம் கடந்த 1760-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

167 கடைகளுடன் இயங்கி வருகிறது

167 கடைகளுடன் இயங்கி வருகிறது

குறிப்பாக சீனா, ரஷ்யா, இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என மொத்தம் 18 நாடுகளில் 167 கடைகளுடன் இயங்கி வருகிறது.

அடுத்த 3ஆண்டுகளில்..

அடுத்த 3ஆண்டுகளில்..

இந்தியாவில் 29 நகரங்களில் 88 ஹாம்லேஸ் கடைகள் உள்ளன, அடுத்த 3ஆண்டுகளில் இந்தியாவில் 200 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள ஹாம்லேஸ் கடைகளில் வர்த்தக விவகாரத்தை கவனித்துக் கொள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்

இந்நிலையில் தான் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஹாம்லேஸ் நிறுவனத்தை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஹாம்லேஸ நிறுவனத்தை ரூ.620 கோடி விலையில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது எனக் கூறப்படுகிறது.

 100 மில்லியன்

100 மில்லியன்

கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சார்ந்த லுடென்டோ நிறுவனத்தின் வசம் இருந்த ஹாம்லேஸ் நிறுவனத்தை சீனாவைச் சேர்ந்த சி பேனர் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் என்ற முன்னனி நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

2011 முதல் 2018 வரை

2011 முதல் 2018 வரை

இந்தியாவில் பொம்மை விற்பனை மதிப்பு 2018-ம் ஆண்டு 150-கோடி டாலராக இருந்தது,2011 முதல் 2018 வரையான காலத்தில் 15.9சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. பின்று 2024-ம் ஆண்டு இந்தியாவில் பொம்மை விற்பனை மதிப்பு
303 கோடி டாலராக அதிகாரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஹாம்லேஸ் நிறுவனத்தின் பொம்மை விற்பனையிலும் ரிலையன்ஸ் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Brands inks pact to buy Hamleys: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X