நம்பமுடியாத விலையில் ஆண்டு முழுவதும் இலவசமாக 500+ சேனல்கள்; ரிலையன்ஸ் பிக் அதிரடி.!

ரிலையன்ஸ் பிக் டிவி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு கவர்ச்சிகரமான டிடிஎச் சலுகை ஒன்றை அறிவித்தது.

|

ரிலையன்ஸ் பிக் டிவி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு கவர்ச்சிகரமான டிடிஎச் சலுகை ஒன்றை அறிவித்தது. அந்த சலுகையானது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சென்றடையும் நோக்கத்தின் கீழ், ரிலையன்ஸ் பிக் இன்று, நாடு முழுவதும் உள்ள சுமார் 50,000 தபால் அலுவலகங்களுடனான அதன் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது.

இனி இந்த அஞ்சல் அலுவலகங்களின் உதவியுடன், டிடிஎச் சேவை வழங்குநரான ரிலையன்ஸ் பிக், அதன் உயர் வரையறை, உயர் செயல்திறன் வீடியோ குறியீட்டு (high-definition, high-efficiency video coding - HD HEVC) செட்-டாப் பாக்ஸ்களை முன்பதிவு செய்ய வழிவகுக்கப்படும்.

முன்பதிவு செய்வது எப்படி.?

முன்பதிவு செய்வது எப்படி.?

எனினும், முன்பதிவு செய்யும் முன்பே வாடிக்கையாளர்கள் ரூ.500/- பணம் செலுத்த வேண்டும் என்பதில் ந்த மாற்றமும் இல்லை. இந்த செயல்முறை அறிவிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் தபால் நிலையங்களுக்கு சென்று, செட் டாப் பாக்ஸை பதிவு செய்யலாம்.

நிறுவனத்தின் நோக்கம் என்ன.?

நிறுவனத்தின் நோக்கம் என்ன.?

"ஒவ்வொரு இந்திய வீட்டுக்கும் எங்கள் எச்டி ஹெச்விசி செட் டாப் பாக்ஸை கொண்டு செல்வதே எங்கள் நோக்கம் மற்றும் அதை பட்டியலிடப்பட்ட இந்திய தபால் அலுவலகங்களில் இருந்து பதிவு செய்ய முடியும்" என்று ரிலையன்ஸ் பிக் டிவி இயக்குனர் விஜேந்தர் சிங் கூறியுள்ளார்.

என்னென்ன நன்மைகள்.?

என்னென்ன நன்மைகள்.?

கடந்த மார்ச் மாதத்தில், ரிலையன்ஸ் பிக் டிவி மகாராஷ்டிரா மற்றும் கோவா முழுவதுமாக அதன் செட் ஆப் பாக்ஸ்களின் முன்பதிவுகளை தொடங்கியது. ஆம், அந்த இரு பகுதிகளிலும் தபால் அலுவலகங்கள் மூலம் தான் முன்பதிவு செய்யப்பட்டன. பின்னர் 2018 மார்ச்சின் முடிவில் ரிலையன்ஸ் பிக் டிவி நிறுவனத்தின் புதிய தலைமையானது ஆண்டுக்கு ரூ.2,000/- என்கிற விலையில் ஒரு வருடத்திற்கான இலவச டி.டி.எச் சேவையை வழங்கும் என்கிற வாக்குறுதியை அளித்தது.

கேஷ்பேக் எப்போது கிடைக்கும்.?

கேஷ்பேக் எப்போது கிடைக்கும்.?

ஒரு வருடம் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் அதே சேவைகளை இலவசமாகப் பெற ஒவ்வொரு மாதமும் ரூ.300/- செலுத்த வேண்டும். இப்படியாக மூன்று வருட காலத்திற்கு பிறகு ரூ.500/- (என்கிற முழு முன்பதிவு தொகை) மற்றும் ரூ.1,500/- (நிறுவல் நேரத்தில் சேகரிக்கப்படும் தொகை) ஆகியவற்றை மொத்தமாக திருப்பிச் செலுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேஷ்பேக் எப்படி கிடைக்கும்.?

கேஷ்பேக் எப்படி கிடைக்கும்.?

ரிலையன்ஸ் பிக் டிவியின் பயனர்கள், ஆண்டு முழுவதும் 500கும் மேற்பட்ட சேனல்களை அனுபவிக்க முடியும். அதன் பின்னரே ரூ.300/- என்கிற கட்டணத்தின் கீழ் மாதாந்திர சேவையை அனுபவிக்க முடியும். மேலும் கிடைக்கப்பெறும் கேஷ்பேக் ஆனது புரீசார்ஜ் வடிவில் தான் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் கிடைக்கும்.?

எங்கெல்லாம் கிடைக்கும்.?

விருப்பம் உள்ளவர்கள் ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகண்ட், ஆந்திரா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் உள்ள தபால் நிலையங்களை அணுகவும். இந்த செயல்முறை தமிழ் நாட்டில் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை. அது பற்றிய கூடுதல் தகவலுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் செய்திகள் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Reliance Big TV Set-Top Boxes Open for Booking at Over 50,000 Post Offices. Read more about this in Tamil GizBo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X