அமேசானுக்கு குட்பை: எங்கும் ரிலையன்ஸ்., எதிலும் ரிலையன்ஸ்- மற்றொரு பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்!
420 க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியிருக்கும் ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்குவதாக அறிவப்பு வெளியாகியுள்ளது. பிக்பஜார், எஃப்பிபி, ஈஸி டே, ஃபுட்ஹால் ஃபார்மட்ஸ் போன்ற பெயரில் ஃபியூச்சர் குழுமம் செயல்பட்டு வந்தது.

ஆன்லைன் விற்பனை தேவை அதிகரிப்பு
இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் மளிகை பொருட்கள் விற்பனையில் அடியெடுத்து வைத்துள்ளது. ஜியோமார்ட் இந்தியாவில் தொடங்கப்பட்டதில் தொடர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற்றமடைந்து வருகிறது.

பிக் பஜார் நிறுவனம்
இந்த நிலையில் பொருட்கள், ஆடைகள் என பலவற்றில் நாட்டில் பெரிய செயின் தொடர் கடைகளை கொண்ட பல நிறுவனங்களில் பிக் பஜார் ஒன்று. தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கு ஆஃபர்கள், பர்ச்சேசிங் அடிப்படை சலுகைகள் என பல வகைகளில் வழங்குகிறது.

சில்லறை விற்பனை சந்தை அதிகரிக்க வாய்ப்பு
இந்தியாவில் சில்லறை விற்பனை தளங்களை பிடிக்க பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கு காரணம் 2017 ஆம் ஆண்டில் சுமார் 800 பில்லியனாக இருந்த இந்திய சில்லறை விற்பனை சந்தை 2026 ஆம் ஆண்டில் சுமார் 1.75 டிரில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது போன்ற காரணங்களே ஆகும்.

ஃபியூச்சர் குழுமம்
பிக் பஜார், பிராண்ட் ஃபேக்டரி, எஃப்பிபி, ஈஸி டே, ஃபுட்ஹால் ஃபார்மட்ஸ் போன்ற பல பெயர்களில் ஃபியூச்சர் குழுமம் செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவில் 420-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது.
தற்போது ஃபியூச்சர் குழுமம் கடன் சுமையால் சிக்கித் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும்
ஃபியூச்சர் நிறுவனம் இந்தியாவில் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருப்பதால் அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஃபியூச்சர் குழுமத்தை கைப்பற்ற அமேசான், ரிலையன்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்தியா ஆன்லைன் ஷாப்பிங்
ஃபியூச்சர் நிறுவனத்தை வாங்க பல நிறுவனங்களும் ஆர்வம் காட்டினர், இதில் குறிப்பிடத்தக்க ஒன்று அமேசான், இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் கொடிக்கட்டி பறக்கும் அமேசான் ஃபியூச்சர் குழுமத்தில் 1.3 விழுக்காடு பங்குகளை வாங்கியது.

ஃபியூச்சர் குழுமத்தை வாங்கிய ரிலையன்ஸ்
ஃபியூச்சர் நிறுவனத்தை வாங்க பல நிறுவனங்கள் முனைப்புடன் இருந்தாலும், ரிலையன்ஸ் குழுமம் சுமார் ரூ.24,713 கோடி செலவில் ஃபியூச்சர் குழுமத்தை வாங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ்
இந்தியாவில் ஆன்லைன் தளம் என்றால் பிரதானமாக திகழ்வது அமேசான், பிளிப்கார்ட் என்றே கூறலாம். தொடர்ந்து ரிலையன்ஸ் அடுத்தடுத்த அறிவிப்பால் ஆன்லைன் தளத்தில் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் என்ற போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றம்
அதேபோல் ஆன்லைன் தளத்தில் மட்டுமின்றி பிக்பஜார் போன்ற பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வந்த ரிலையன்ஸ் ஃபியூச்சர் குழுமத்தை வாங்குவதன் மூலம் ஆஃப்லைனிலும் தனது கொடியை நிலைநாட்ட முனைப்பு காட்டுகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை.


Click it and Unblock the Notifications