ரூ.2,999க்கு 4ஜி ஸ்மார்ட்போன், இலவச 4ஜி டேட்டா : ரிலையன்ஸ் ஜியோ அதிரடி.!!
இந்திய சந்தையில் தொலைத்தொடர்பு சேவைகளைக் குறைந்த விலைக்கு வழங்குவதில் பெயர் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்த அதிரடியை அறிவித்து விட்டது. அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று ரிலையன்ஸ் ஜியோ மூலம் 4ஜி சேவைகளைக் குறைந்த விலைக்கு வழங்க இருக்கின்றது.
ரிலையனஸ் லைஃப் நிறுவனம் ஃபிளேம் 3, ஃபிளேம் 4, ஃபிளேம் 5, மற்றும் ஃபிளேம் 6 போன்ற கருவிகள் இந்தியாவில் ரூ.2,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. தனது ஸ்பெக்ட்ரம் முழுக்க ஸ்மார்ட்போன்களின் விலையைக் குறைத்திருப்பதன் மூலம் இந்தியாவின் விலை குறைந்த 4ஜி ஸ்மார்ட்போன்களை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கின்றது.

ஜியோ பிரீவியூ
ரூ.2,999 விலைக்கு ரிலையன்ஸ் லைஃப் கருவிகள் வாங்கப் பரிசீலனை செய்யக்கூடிய அளவில் தான் இருக்கின்றது. இதன் மூலம் பயனர்களுக்கு இலவச ஜியோ பிரீவியூ சேவை வழங்கப்படுகின்றது.

இலவச டேட்டா
இதன் மூலம் கருவிக்கு ரூ.2,999 செலுத்தும் போது ரிலையன்ஸ் ஜியோ சேவையில் மூன்று மாதங்களுக்கு இலவச 4ஜி டேட்டா பெற முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்க ஒரே வழி ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன் வாங்குவது மட்டுமே. இந்தக் கருவியானது அனைத்து ரிலையனஸ் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கின்றது. இவை அனைத்தும் 4ஜி VoLTE திறன் கொண்டிருக்கின்றது.

அம்சங்கள்
ஃபிளேம் 3, 4, 5, 6 கருவிகள் அனைத்தும் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கின்றது. இதோடு 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே, 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி
ஃபிளேம் 3 மற்றும் ஃபிளேம் 5 கருவிகளில் மட்டும் 4ஜிபி மெமரியும், கூடுதலாக மெமரியை 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஃபிளேம் 4 மற்றும் ஃபிளேம் 6 கருவிகளில் 8 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா
அனைத்து ஃபிளேம் ஸ்மார்ட்போன்களிலும் ப்ரைமரி மற்றும் செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளன. ஃபிளேம் 3 மற்றும் ஃபிளேம் 5 கருவிகளில் 5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மொழி
ஃபிளேம் கருவிகள் அனைத்தும் 10 இந்திய மொழிகளில் இயங்கும் படி விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கருவிகளும் ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.

இண்டர்நெட்
டூயல் சிம் ஸ்லாட் மூலம் பயனர்கள் இரண்டு சிம்களிலும் 4ஜி பயன்படுத்த முடியும், எனினும் 4ஜி பயன்படுத்தும் போது மற்றொரு சிம் கார்டில் 2ஜி மட்டும் தான் பயன்படுத்த முடியும்.

விலை
ரூ.2,999க்கு ரிலையன்ஸ் லைஃப் கருவிகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் 4ஜி/VoLTE கருவிகளை வழங்குகின்றது. கருவியோடு இலவச டேட்டாவும் வழங்கப்படுவது இந்தக் கருவிகளின் விற்பனையை அதிகரிக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications