Home
News

JioPhone 5G.. ஹனுமான் AI.. அல்டிமேட் அறிவிப்பை சொல்ல போகும் அம்பானி.. கம்மி விலையில் Jio 5ஜி போன் கிடைக்குமா?

இந்திய மக்களுக்கு இன்று ஒரு நற்செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாரும் எதிர்பார்த்திடாத மலிவு விலையில், முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ நிறுவனம் அதன் முதல் பட்ஜெட் பிரெண்ட்லி 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 47வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) ஆகஸ்ட் 29, 2024 ஆம் தேதியான இன்று நடைபெற உள்ளது. நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி மற்றும் ஜியோ குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். AGM இன்று மாலை 2 மணிக்கு தொடங்கும்.

ஜியோ 2016 இல் வணிக ரீதியாகத் தொடங்கியதிலிருந்து தொலைத்தொடர்பு இயக்கி நிறுவனமாக இருந்து தொழில்நுட்ப சேவை வழங்குநராக மாறியது. ஜியோவின் பயனர் அடிப்படை வளர்ச்சி மற்றும் அதன் 5G நெட்வொர்க்கின் விரிவாக்கம் குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் ஏற்கனவே 5G சேவைகளை ஜியோ தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் 5G நெட்வொர்க்கின் விரிவாக்கம் மற்றும் பயனர் புள்ளிவிவரங்கள் குறித்த விவரங்கள் AGM இல் பகிரப்படலாம்.

JioPhone 5G.. ஹனுமான் AI.. அல்டிமேட் அறிவிப்பை சொல்ல போகும் அம்பானி..

JioPhone 5G.. ஹனுமான் AI.. அல்டிமேட் அறிவிப்பை சொல்ல போகும் அம்பானி:

ஜியோ ஃபைபர் (Jio Fiber) மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) உள்ளிட்ட அதன் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. முகேஷ் அம்பானியின் நிறுவனம் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய மையப்பட்ட ஜெனரேட்டிவ் AI டூல் ஹனுமான் ஏஐ (Hanooman AI) சேவைக்கான விரிவாக்கத் திட்டத்தை அறிவிக்கலாம் எனக் கருதப்படுகிறது. சாட் ஜிபிடி (ChatGPT) போன்ற இந்த கருவி, விசாரணைகளுக்கு விரைவான பதில்களை வழங்குகிறது.

ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான Hanooman AI சேவை ஏறக்குறைய 12 இந்திய மொழிகள் மற்றும் 98 வெளிநாட்டு மொழிகளை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் உள்ள முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) இல் அதிகமாக முதலீடு செய்து வருகின்றன. கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற ஜாம்பவான்கள் ஏற்கனவே தங்கள் சொந்த AI கருவிகளை அறிவித்துள்ளன.

இன்னும் ஏராளமான தலைசிறந்த நிறுவனங்களும் அவர்களின் சொந்த ஏஐ-க்களை உருவாக்கி வருகின்றன. இந்த வரிசையில், இப்போது ஹனுமான் AI சேவையும் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள ஏழு ஐஐடி-கள் ஒன்று சேர்ந்து இந்த ஹனுமான் ஏஐ சேவையை உருவாக்கி வருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. SML இந்தியா மற்றும் பல்வேறு நிறுவனங்களும் இதில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோஃபோன் 5G (JioPhone 5G):

ரிலையன்ஸ் நிறுவனம், அதன் AGM மீட்டில் ஒரு புதிய மலிவு விலை 5G ஸ்மார்ட்போனை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோஃபோன் 4ஜி (JioPhone 4G) போலவே, பயனர்களுக்கு மலிவு விலையில் 5G ஸ்மார்ட்போனை வாங்க இந்த ஆண்டு வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, ரிலையன்ஸ் கூகிளுடன் இணைந்து அதன் மலிவு விலையில் 4G ஸ்மார்ட்போனை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோஃபோன் 5G (JioPhone 5G) ஒரு மலிவு விலை 5G ஸ்மார்ட்போனாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. AGM இன் முக்கியமான அம்சமாக இருக்கும். இந்த நடவடிக்கை மலிவு விலையில் ஜியோஃபோன் 4G வெற்றிகரமாக வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இருக்கும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் AGM முகேஷ் அம்பானியிடமிருந்து பல முக்கிய அறிவிப்புகள் இன்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த நிகழ்வு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance AGM 2024 Meet Expected JioPhone 5G Hanooman AI JioFiber Jio AirFiber and Much More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X