Reliance AGM 2021: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட சுந்தர் பிச்சை, முகேஷ் அம்பானி.!

|

கொரோனா பாதிப்பில் உயிரழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருடாந்தி பொதுக்கூட்டத்தினை தொடங்கிவைத்து உரையாற்றிய முகேஷ் அம்பானி அவர்கள், மிகவும் கடினமான இந்த காலத்தில் எங்கள் வணிக செயல்திறனை விட எனக்கு மகிழ்ச்சியை கொடுப்பது
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மனிதாபிமான முயற்சிகள் என்று பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் எங்களது ஊழியர்கள்

மேலும் எங்களது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். அதேபோல் நாடு மற்றும் சமூகத்திற்காக நாங்கள் அக்கறை கொள்கிறோம் என்று பேசினார் முகேஷ் அம்பானி. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நீடா அம்பானி

தொடர்ந்து பேசிய ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நீடா அம்பானி, கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியவுடன் இந்தியா கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டது. எனவே ​அதிக தூய்மை கொண்ட மருத்துவ தர திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக, சில நாட்களில் எங்கள் ஜாம்நகர் (குஜராத்) சுத்திகரிப்பு நிலையத்தில் இதற்கான வசதியை உருவாக்கினோம், இரண்டு வாரங்களுக்குள் சுமார் 1100 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தியை அதிகரித்தோம்என்றார்.

இப்படியெல்லாம் கப்பலை சோதனை செய்யனுமா? நடுக்கடலில் நடந்த சோதனை: வைரலாகும் வீடியோ.!இப்படியெல்லாம் கப்பலை சோதனை செய்யனுமா? நடுக்கடலில் நடந்த சோதனை: வைரலாகும் வீடியோ.!

அதை தொடர்ந்து ரிலையன்ஸ் அறக்கட்டளையால்

அதை தொடர்ந்து ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார் நீடா அம்பானி. குறிப்பாக ஜியோ பல்கலைக்கழகம் தனது முதல் கல்வியாண்டில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியில், டிஜிட்டல் மீடியா மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் தொடர்பு ஆகிய பாடப்பிரிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த நகழ்வில் மிகவும் எ

குறிப்பாக இந்த நகழ்வில் மிகவும் எதிர்பார்த்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிவித்தார் முகேஷ் அம்பானி. மேலும் இந்தியாவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த 4ஜி போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார் முகேஷ் அம்பானி.

இது மொபைல் கட்டிங் சார்: ஒருமுறை போன் செய்தால் போதும் சலூன் உங்க வீட்டுக்கே வரும்.. பட்டைய கிளப்பும் பிஸ்னஸ்..இது மொபைல் கட்டிங் சார்: ஒருமுறை போன் செய்தால் போதும் சலூன் உங்க வீட்டுக்கே வரும்.. பட்டைய கிளப்பும் பிஸ்னஸ்..

செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகம்

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் ஆனது செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமானஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம்.

 அதிகாரி சுந்தர் பிச்சை.

மேலும் 4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ஜியோ கூட்டணயில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்படுகிறது என்று தெரிவித்தார் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. எனவே இந்த 5ஜி ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance AGM 2021: Mukesh Ambani announces important announcements including Jio smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X