4ஜி வோல்ட்இ பீச்சர்போன் வெளியீடு தாமதமானது

|

ஜியோ 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டது முதல் அந்நிறுவனத்தின் 4ஜி வோல்ட்இ பீச்சர்போன் ஒன்றை தயாரித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. சமீத்திய தகவல்களின் படி ஜியோ பீச்சர் போன் விலை சந்தையில் மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

4ஜி வோல்ட்இ பீச்சர்போன் வெளியீடு தாமதமானது

கடந்த வாரம் வெளியான தகவல்களில் புதிய ஜியோ பீச்சர்போன் விலை ரூ.500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே வெளியான தகவல்களில் ரிலையன்ஸ் லைஃப் பிரான்டு பீச்சர் போனாக இது வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இம்மாதம் வெளியாகாது

இம்மாதம் வெளியாகாது

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஜியோ பீச்சர் போன் ஜூலை 21-ம் தேதி வெளியாகாது என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பீச்சர்போன்கள் ஜியோ ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் வெளியிடப்படலாம் என்றும் முதற்கட்டமாக 20 மில்லியன் மொபைல் போன்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

லைஃப் பிரான்டு மொபைல் போன்கள்

லைஃப் பிரான்டு மொபைல் போன்கள்

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஜியோ பீச்சர்போன்கள் லைஃப் பிரான்டிங் கொண்டு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இரண்டு வித மாடல்களில் வெளியிடப்பட இருக்கும் புதிய பீச்சர்போன்களில் இரண்டாவது மாடல் ரூ.2,639 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் மற்றொரு மாடல் ரூ.1,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இதுவரை இணையத்தில் வெளியான தகவல்களில் ஜியோ பீச்சர் போனில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் 2000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலம் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் அல்லது ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் வழங்கப்படலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance 4G VoLTE feature phones seem to have faced a delay in their launch.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X