Home
News

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி: முன்பதிவு இன்று தொடங்கியது.!

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கி உள்ளது. இதுவரை 1,270 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ந்நிலையில் நாடு முழுவதும் 15 முதல் 18

இந்நிலையில் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள கோவின் தளத்தில் இன்று முதல்பதிவு செய்யலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இப்போது மஸ் ப

இப்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இதுதொடர்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்களுக்கு உரையாற்றி பிரதமர் மோடி, வரும் ஜனவரி 3-ம் தேதி அன்று 15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.

தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்கான

குறிப்பாக தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு இன்று (01-01-2021) தொடங்கியது. தகுதியுடைய சிறார்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொண்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ல் https://www.cowin.gov.in/ என்ற மத்திய

அதேபோல் https://www.cowin.gov.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று முக்கியவிவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக நாளை மறுநாள் முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்குகொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து பல்வேறு மா

அதேபோல் ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. குறிப்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் ஒமைக்ரான் வைரஸ் பரவும் வேகத்தை கணக்கிடுகையில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவ துவங்கி உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ல் 8 ஆம் வகுப்பு வரை

மேலும் தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது எனவும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெருந்தொற்றின் மிகவும்

சமீபத்தில் கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அனைத்து நாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸின் பரவல் மிகவும்கவலைதரும் வகையில் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பா அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்து என்னவென்றால், கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம். குறிப்பாக அனைத்து இடங்களிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக உயர்கிறது. எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் இந்த மோசமான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் எனது விடுமுறை திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.அதேபோல் இந்த மோசான ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்துநம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும். பின்பு மக்கள் கூடும் இடங்களை
தவிர்க்க வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Registration for the Covid Vaccine for 15-18 year olds starts today: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X