ரெஸ்ட் இல்லாமல் 24 மணி நேரமும் ஃபிரிட்ஜ் ஓடலாமா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
இன்றைய நவீன வாழ்க்கையில் ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட்டி டிவி, போன்று ஃபிரிட்ஜ் ( குளிர்சாதனப் பெட்டி) என்பது ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய தேவையாகி விட்டது. குறிப்பாக இதைப் புரிந்து கொண்ட பல முன்னணி நிறுவனங்கள் பலவிதமான ஃபிரிட்ஜ் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன.
குறிப்பாக சில நிறுவனங்கள் தனித்துவமான வசதிகளைக் கொண்டு சற்று உயர்வான விலையிலும் குளிர்சாதனப் பெட்டியை அறிமுகம் செய்கின்றன. அதாவது சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனித்துவமான வசதிகளுடன் குளிர்சாதனப் பெட்டியை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 24 மணி நேரமும் ஃபிரிட்ஜ் ( குளிர்சாதனப் பெட்டி) ஓடலாமா? அல்லது குளிர்சாதனப் பெட்டியை சில மணி நேரம் ஆஃப் செய்து வைப்பது சரியா? என்பதை அறிந்துகொள்வோம்.

அதாவது குளிர்சாதனப்பெட்டி இன்று பெரும்பாலானோர் வீடுகளில் பயன்படுத்தும் ஒன்று. பழங்கள், பால், காய்கறிகள், மாவு போன்றவற்றையும், மீதமுள்ள உணவுகளை கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் குளிர்சாதனப் பெட்டியை பயன்படுத்துகிறோம். பலரது வீடுகளிலும் இந்த குளிர்சாதனப்பெட்டி தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும்.
குறிப்பாக குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே இருக்கும் அறைகள் குளிர்ச்சி இருக்கும் வரை பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்னோட்டம் குளிர்சாதனப்பெட்டிக்குச் செல்லும் வரை அதன் கம்ப்ரசர் வேலை செய்து கொண்டே இருக்கும். குளிர்விக்கும் செயல்முறை தொடர்ந்து நடக்கும். ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகும் சிறிது நேரம் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும். அதுவரை உணவு கெட்டுப் போகாது. என்பது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரமும் ஃபிரிட்ஜ் ( குளிர்சாதனப் பெட்டி) ஓடலாமா? அதாவது குளிர்சாதனப் பெட்டி ஒரு எலக்டாரனிக் குளிரூட்டும் சாதனமாகும். இது மணிக்கணக்கில் தொடர்ந்து இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. எனவே குளிர்சாதனப் பெட்டியை கடிகாரத்தைப் போல தொடர்ந்து இயக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. பின்பு வருடம் முழுவதும் ஃபிரிட்ஜை அணைக்காவிட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குளிர்சாதன பெட்டியைச் சுத்தம் செய்யும் போதும், ஏதேனும் சேதமடைந்தால் அதைச் சரிசெய்யும் போதும் நிச்சயமாக சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.
குளிர்சாதன பெட்டியை தினமும் 1-2 மணி நேரம் ஆஃப் செய்து வைத்தாலோ அல்லது நாள் முழுவதும் பல முறை ஆஃப் செய்தும் ஆன் செய்தாலோ. சரியான குளிர்ச்சியை கொடுக்க முடியாது. உள்ளே வைத்திருக்கும் உணவு மற்றும் பானங்கள் கெட்டுவிடும். 1-2 மணிநேரம் அதை மூடி வைத்து மின்சாரத்தைச் சேமிப்பதில் அறிவான செயல் இல்லை. குறிப்பாக உங்கள் ஃபிரிட்ஜ் தானாகவே மின்சாரத்தைச் சேமிக்கும் திறன் கொண்டது.
அதாவது இப்போது வரும் அனைத்து ஃப்ரிட்ஜ்களிலும் மின் சிக்கனத்திற்காகத் தானியங்கி ஆஃப் அல்லது ஆட்டோ கட் அம்சங்கள் உள்ளன. இதனுடன் குளிர்சாதனப் பெட்டி ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்குக் குளிர்ந்த பிறகு தானாகவே அணைக்கப்படும். இதனால் மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஃப்ரிட்ஜை அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் செய்வது அதன் கம்ப்ரஸரில் load-ஐ ஏற்படுத்துகிறது. அது கருவியில் கோளாறை ஏற்படுத்தலாம். பின்பு நீங்கள் நீண்ட நாட்களுக்கு வெளியூர் செல்கிறீர்கள் என்றால், அந்த சமயம் அனைத்து பொருள்களையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டுச் செல்வது நல்லது.


Click it and Unblock the Notifications








