அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் "ப்ளூடூத் செருப்பு"டன் சிக்கிய விஷமிகள்.. கப்ஸா அடிக்க இப்படி ஒரு முயற்சி

|

பள்ளியில் மாணவர்கள் பரிட்சையில் தேர்வு எழுந்தும் போது பிட்டு அடிக்காமலும், மற்ற மாணவர்களை பார்த்து கப்ஸா அடிக்காமலும் பார்த்துக்கொள்வது ஆசிரியர்களின் வேலையாக இருக்கிறது. ஆனால், சமீபத்தில் ராஜஸ்தானில் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான ஒரு முக்கியமான தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வில் ஏமாற்ற முயன்ற ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களின் விசித்திரமான முயற்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"ப்ளூடூத் சப்பல்" அணிந்து ஆசிரியர் தேர்வில் கப்ஸா அடிக்க முயன்றவர்

ராஜஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் விண்ணப்பதாரர்கள் "ப்ளூடூத் சப்பல்" அணிந்து தவறான செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரை நீங்கள் ப்ளூடூத் அம்சத்துடன் ஏராளமான கேட்ஜெட்களை பார்த்திருக்கலாம். ஆனால், இது முற்றிலும் வித்தியாசமானது. தேர்வு எழுத வந்த நபர் அணிந்திருந்த செருப்பில் புளூடூத் சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதைத் தேர்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒருவரை வைத்து மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட சோதனை

ஒருவரை வைத்து மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட சோதனை

இந்த தவறான செயலில் ஈடுபட்ட முதல் நபர் அஜ்மீரில் உள்ள தேர்வறையில் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. முதல் நபர் பிடிபட்ட பிறகு, காவல்துறை விரைவில் மாநிலம் முழுவதும் அனைத்து தேர்வறைக்கும் இந்த தகவலைத் தெரியப்படுத்தியது. இதன்படி, மாநிலம் முழுதும் உள்ள தேர்வறையில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் நான்கு நபர்களைத் தேர்வு அதிகாரிகள் கையும் களவுமாகக் கண்டறிந்தது.

ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!

தேர்வு எழுதிய நபரின் காதுக்குள் மைக்ரோ இயர்பட்ஸ்

தேர்வு எழுதிய நபரின் காதுக்குள் மைக்ரோ இயர்பட்ஸ்

பிகானர் மற்றும் சிகார் ஆகிய இடங்களில் ப்ளூடூத் மற்றும் மொபைல் சாதனங்களுடன் இதே போன்ற சப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்வெழுத வந்த நபரின் சப்பல் உள்ளே ஒரு முழு தொலைப்பேசி மற்றும் ஒரு ப்ளூடூத் கருவி இருந்து என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல், தேர்வு எழுதிய நபரின் காதுக்குள் மைக்ரோ இயர்பட்ஸ் சாதனம் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தேர்வு மையத்திற்கு வெளியில் இருந்து உதவிய நபர்கள்

தேர்வு மையத்திற்கு வெளியில் இருந்து உதவிய நபர்கள்

இவர்கள் தேர்வறையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு வெளியில் இருந்து மூன்றாம் நபர் யாரோ உதவியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ரத்தன் லால் பார்கவ் கூறியுள்ளார். சிறிய அளவிலான தொழிலாகத் தோன்றும் இந்த விரிவான மோசடித் திட்டத்தை காவல்துறை இன்னும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இந்த ப்ளூடூத் சப்பல் புத்திசாலித்தனமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் சில அறிக்கைகள் இதற்காக மோசக்காரர்கள் பிரத்தியேக தயாரிப்பை மேற்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..

இந்த சாதனத்திற்காக அவர்கள் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

இந்த சாதனத்திற்காக அவர்கள் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

இதில் பயன்படுத்தப்பட்ட சில வன்பொருள்கள் சேர்த்துத் தேர்வு எழுதிய நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்திற்காக அவர்கள் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கியதாகவும் சில வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றித் தேர்வு அதிகாரி கூறியது, ' தேர்வு எழுதிய ஒரு நபர் தனது செருப்புகளில் ப்ளூடூத் சாதனங்களை வைத்து ஏமாற்ற முயன்றதைத் தேர்வின் தொடக்கத்தில் நாங்கள் கண்டறிந்து அவரைப் பிடித்தோம். அவருக்கு எங்கெல்லாம் தொடர்புகள் உள்ளன, யார் அவருடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

இனி தேர்வறைக்குள் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது

இனி தேர்வறைக்குள் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது

அந்த தகவலை நாங்கள் உடனடியாக மற்ற மாவட்டங்களின் உள்ள தேர்வு மையங்களுக்கும் தெரியப்படுத்தி அதிகாரிகளை எச்சரித்தோம். இதன் விளைவாக ஒட்டுமொத்தமாக 5 பேர் பிடிபட்டனர். இனி வரும் காலத்தில் தேர்வின் அடுத்த கட்டத்தில் தேர்வு எழுத நபர்கள் செருப்புகள், ஷூக்கள் மற்றும் சாக்ஸுடன் யாரும் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அஜ்மீர் போலீஸ் அதிகாரி ஜெகதீஷ் சந்திர சர்மா கூறியுள்ளார்.

12 மணிநேரம் நெட்வொர்க் தடை

12 மணிநேரம் நெட்வொர்க் தடை

இதனைத் தொடர்ந்து REET தேர்வில் மோசடி செய்வதைத் தடுக்க ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் மொபைல் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் 12 மணிநேரம் துண்டிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் உள்ள 31,000 பணியிடங்களுக்கான தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆவதற்கு ஒருவர் REET தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். REET எடுக்கத் திட்டமிடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையுடன் தேர்வு நடத்தப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
REET Candidates Caught Using Bluetooth Chappals In Rajasthan Eligibility Examination For Teachers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X