12-வது ஜென் இன்டெல் கோர், 16ஜிபி ரேம் உடன் ரெட்மி புக் ப்ரோ 15 (2022) லேப்டாப்- விலை இதோ., தாராளமா வாங்கலாம்!
ரெட்மி புக் 15 (2022) 12-வது ஜென் இன்டெல் கோர் உடன் என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2050 ஜிபியூ ஆதரவோடு தொடங்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி புக் 15 (2022) லேப்டாப்
ரெட்மி புக் 15 (2022) லேப்டாப் ஆனது 15.6 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இது விண்டோஸ் 11 ஆதரவோடு வருகிறது. ரெட்மி புக் 15 (2022) மார்ச் 24 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரெட்மி புக் ப்ரோ 15 (2022) மார்ச் 17 அன்று நடந்த மெய்நிகர் நிகழ்வில் ரெட்மி கே50 தொடர் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெட்மி புக் ஆனது 15.6 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ரெட்மி புக் விண்டோஸ் 11 ஆதரவோடு வருகிறது.

12-வது ஜென் இன்டெல் கோர் வசதி
ரெட்மி புக் 15 (2022) வேரியண்ட்கள் 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ5/ ஐ7 செயலி ஆதரவோடு என்வீடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2050 ஜிபியு மற்றும் 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் ஆனது இன்டெல் அல்ட்ரா எச்டி கிராஃபிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. லேப்டாப் ஆனது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. ரெட்மி புக் ப்ரோ 15 (2022) ஆனது 72 Whr பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஒருமுரை சார்ஜ் செய்தால் 12 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த லேப்டாப் பயனர் மைலர் டச்பேட், பவர் பட்டன் கைரேகை ஸ்கேனர் மற்ரும் மைக்ரோசாஃப்ட் பிடிபி கிளிக்பேட் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.

ரெட்மி புக் 15 (2022) விலை மற்றும் கிடைக்கும் தன்மை
ரெட்மி புக் 15 (2022) விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், ரெட்மி புக் 15 (2022) இன்டெல் அல்ட்ரா எச்டி கிராஃபிக்ஸ் கொண்ட 12-வது ஜென் கோர் ஐ5 செயலிக்கான ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் விலை ஆனது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.67,000 ஆக இருக்கிறது. ரெட்மி புக் 15 (2022) 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் மற்றும் என்வீடியா ஜிஎக்ஸ்பியூ20505005050 ஆதரவு கொண்ட வேரியண்ட் விலை ரூ.81,400 ஆக இருக்கிறது. என்வீடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2050 ஜிபி உடன் வரும் 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 செயலியுடன் கூடிய லேப்டாப் ஆனது இந்திய விலை மதிப்புப்படி ரூ.89,780 ஆக இருக்கிறது.

மார்ச் 24 முதல் விற்பனை
இந்த ரெட்மி புக் 15 (2022) லேப்டாப் ஆனது மார்ச் 24 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. சீன நிறுவனம் முழு கட்டணம் செலுத்தும் முதல் 300 நபர்களுக்கு 15 இன்ச் தனிப்பயன் லைனர் பேக் மற்றும் மவுஸ் பேடை வழங்குகிறது. இந்தியா உட்பட ரெட்மிபுக் ப்ரோ 15 (2022) உலகளாவிய கிடைக்கும் தன்மை குறித்த எந்த தகவலும் இல்லை. ரெட்மி புக் ப்ரோ 15 (2022) சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது விண்டோஸ் 11 ஆதரவோடு வருகிறது. இந்த ரெட்மி புக் 15 (2022) சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது விண்டோஸ் 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் ஆனது 15.6 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 3,200x2,000 பிக்சல்கள் தீர்மானம், 16:10 விகிதம், 400 nits உச்ச பிரகாசம் மற்றும் 100 சதவிகிதம் sRGB வண்ண வரம்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. ஹூட்டின் கீழ் 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ7-12650எச் மற்றும் 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-12450எச் செயலிகள் என்வீடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2050 அல்லது இன்டெல் கோர் ஐ5-1245 மாடலுக்கான இன்டெல் அல்ட்ரா எச்டி கிராபிக்ஸ் ஆகிய ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு
ரெட்மி புக் ப்ரோ 15 (2022) மூன்று வகைகளில் வருகிறது. இந்த மூன்று வகைகளும் 5200எம் எச்இசட் அதிர்வெண் உடனான 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது தண்டர்போல்ட் 4 போர்ட் பொருத்தப்பட்டிருக்கிறது. இது இரட்டை 4கே வீடியோ அவுட் மற்றும் இரட்டை 4கே வீடியோ வெளியீட்டை கொண்டிருக்கிறது. ரெட்மி புக் ப்ரோ 15 (2022) எச்டிஎம்ஐ 2.0 போர்ட், ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் வி5.2 மற்றும் வைஃபை 6 ஆகிய ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. இந்த மடிக்கணினி 72Whr பேட்டரியைக் கொண்டுள்ளது, இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
File Images


Click it and Unblock the Notifications