Home
News

இப்படி ஒரு Redmi Smartwatch-ஆ? அடேங்கப்பா! இனி Apple வாட்ச் வியாபாரம் படுத்துடும் போலயே?

ரெட்மி நிறுவனம் இப்போது அதன் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பு வரிசையில் புதிதாக ரெட்மி வாட்ச் 3 (Redmi Watch 3) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கே டஃப் கொடுக்கும் தோற்றத்தில் பல அம்சங்களும் அறிமுகமாகியுள்ளது.

இந்த புதிய Redmi Watch 3 சாதனத்தின் விலை என்ன? இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது? இது எப்போது வாங்க கிடைக்கும்? ஏன் மற்ற ஸ்மார்ட் வாட்ச்களை விட உலக மக்கள் இதன் மீது அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது போன்ற முழு தகவலையும் இப்போது பார்க்கலாம். ரெட்மி வாட்ச் 3 கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகமான பிறகு, இப்போது உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்படி ஒரு Redmi Smartwatch-ஆ? அடேங்கப்பா! Apple வாட்ச்சுக்கு ஆப்பு-ஆ?

இந்த ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் 5 மேஜர் சாட்டிலைட் பொசிஷனிங் அமைப்புகளுடன் வருகிறது. இது புளூடூத் வாய்ஸ் காலிங் அழைப்பு ஆதரவு, மெட்டல் ஃபினிஷ் கொண்ட பிரீமியம் தோற்றம் என்று பல விதங்களில் அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த வாட்ச்சில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

Redmi Watch 3 ஆனது அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆதரவையும் ஆதரிக்கிறது. இது பயனர்களை வானிலை சரிபார்க்கவும், அலாரத்தை அமைக்கவும், ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மென்பொருளானது எமெர்ஜென்சி அழைப்புகளுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. ரெட்மி வாட்ச் 3 பயனர்கள் பக்கவாட்டு பட்டனை மூன்று முறை தட்டுவதன் மூலம் எமெர்ஜென்சி தொடர்புக்கு குயிக் காலிங் மேற்கொள்ள முடியும்.

ரெட்மி நிறுவனத்தின் தகவல் படி, இந்த புதிய ரெட்மி வாட்ச் 3 சாதனம், வரும் மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் Redmi Note 12 4G உடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Redmi Watch 3 சாதனத்தின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த டிவைஸ் 390 × 450 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் வரை கொண்ட 1.75' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இப்படி ஒரு Redmi Smartwatch-ஆ? அடேங்கப்பா! Apple வாட்ச்சுக்கு ஆப்பு-ஆ?

இந்த டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. Redmi Watch 3 ஸ்மார்ட்வாட்ச் இரத்த ஆக்ஸிஜன் சென்சார், இதய துடிப்பு சென்சார், ஸ்டேப் கவுண்ட், ஸ்போர்ட்ஸ் மோட், என்று பல அம்சங்களை கொண்டுள்ளது. Redmi Watch 3 சாதனம் புளூடூத் v5.2 வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 6.0 அல்லது iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்ட சாதனத்துடன் இணக்கமானது.

இதில் காலிங் வசதிக்காக இந்த Redmi Watch 3 இல் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது. ஸ்மார்ட்வாட்ச் 121+ ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது, இதில் 6 ஆட்டோமேட்டிக் ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் வருகிரியாது. Redmi Watch 3 சாதனம் 5atm வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் மதிப்பிடப்பட்டுள்ளது. பீடோ / ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / கேலிலியோ / க்யூஇசட்எஸ்எஸ் ஆதரவு ஆகிவற்றை கொண்டுள்ளது.

Redmi Watch 3 சாதனம் 289எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இது வழக்கமான கேஸில் 12 நாட்கள் பேட்டரி ஆயுள் கொண்டது. ஸ்மார்ட்வாட்ச் NCVM தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்-பளபளப்பான உலோக பூச்சு கொண்டுள்ளது. ரெட்மி வாட்ச் 3 இன் விலை பற்றி பேசுகையில் இது EUR 119 விலையில் அறிமுகமாகியுள்ளது, இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 10,600 ஆகும். இது கருப்பு மற்றும் ஐவரி வண்ணங்களில் வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே ஐரோப்பாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Watch 3 Launched At Rs 10999 with 12 Days Of Battery Indian Launch Date Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X