Home
News

அவசரப்பட்டு புது ஸ்மார்ட்வாட்ச் எதுவும் வாங்காதீங்க.. வேறு எந்த வாட்சிலும் இல்லாத அம்சம்.. Redmi-ல் மட்டுமே இர

புது ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், உங்கள் ஆசைக்கு கொஞ்சம் ஸ்பீட் பிரேக்கர் போட்டு வையுங்கள். தரமான அம்சங்களுடன், ஒரு மிக சிறப்பான ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ரெட்மி (Redmi) நிறுவனம் அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்கிறது.

ரெட்மி நிறுவனம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி 12 (Redmi 12) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன், நிறுவனம் அதன் ஸ்மார்ட்வாட்ச் வரிசையில், ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் (Redmi Watch 3 Active) சாதனத்தை அறிமுகம் செய்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவசரப்பட்டு புது ஸ்மார்ட்வாட்ச் எதுவும் வாங்காதீங்க..

வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்சின் (Smartwatch) அறிமுகத்திற்கு முன்பாக, இந்த சாதனம் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. Redmi இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வழியாக ஒரு புதிய ட்வீட்டை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி Redmi 12 ஸ்மார்ட்போனுடன் Redmi Watch 3 Active அறிமுகப்படுத்தப்படுவதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

Xiaomi நிர்வாகிகள் சாதனம் தொடர்பான சில முக்கிய தகவல்களை வெளியிட்டு, இதன் வருகையை இப்போது டீஸ் செய்துள்ளனர். சியோமி (Xiaomi) இந்த தயாரிப்பை தொடர்ச்சியான கடுமையான சோதனைகள் மூலம் எடுத்துள்ளது. ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் நீருக்கடியில் மூழ்கினாலும் (Underwater performance) திறம்பட செயல்படும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

நீருக்கடியில் 3 நாட்கள் வரை இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், சிறப்பாக செயல்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரெட்மி வாட்ச் 3 ஆக்ட்டிவ் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இந்த விவரக்குறிப்புகளுடன் உலக சந்தையில் முன்னர் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அவசரப்பட்டு புது ஸ்மார்ட்வாட்ச் எதுவும் வாங்காதீங்க..

இதன் சிறப்பம்ச விபரங்களை பற்றி பேசுகையில், இந்த புதிய ரெட்மி வாட்ச் 3 ஆக்ட்டிக் சாதனம் 1.83' இன்ச் அளவு கொண்ட எல்சிடி டிஸ்பிளேவை (Display) கொண்டிருக்கும். இது 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் 2.5D வளைந்த கர்வுடு கிளாஸ் (Curved glass) அம்சத்தை கொண்டிருக்கும்.

இதன் பேட்டரி (Battery) ஆயுள் ஏறக்குறைய 12 நாள் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் புளூடூத் 5.3 (Bluetooth 5.3) இணைப்புடன் வருகிறது. இதில் ப்ளூடூத் வாய்ஸ் காலிங் அம்சமும் (Bluetooth voice calling feature) இடப்பெறுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் 200+ வாட்ச் பேஸ் (watch face) முகங்களை ஆதரிக்கிறது. இத்துடன் 100+ ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.

இது 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது பிளட் ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் அம்சத்துடன் வருகிறது. இது 24 மணி நேர ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில் இது ரூ.5,990 என்ற விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகத்தை ஒட்டி கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Watch 3 Active With 3 Days Underwater Life Feature India Launch Date Revealed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X