புது ஸ்மார்ட் டிவி வாங்க போறீங்களா? அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணி ரெட்மி ஸ்மார்ட் டிவி வாங்கலாம்..

|

சியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட் நிறுவனமான ரெட்மி, ஒரு வழியாக ரெட்மி ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகிவிட்டது. இது இந்தியாவின் ரெட்மி நிறுவனத்திடமிருந்து வெளிவரும் முதல் ஸ்மார்ட் டிவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராண்ட் ஏற்கனவே சீனாவில் தனது ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்து வருகிறது, இப்போது இந்தியாவிலும் இதைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

டிப்ஸ்டர்

டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் கூற்றுப்படி, ரெட்மி டிவிகள் மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும், மேலும் அவை விலை உயர்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சீன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளின் விலையைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. சீனாவில் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் எக்ஸ் சீரிஸ் மாடல்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெட்மி

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் இன் கீழ் நிறுவனம் 50' இன்ச், 55' இன்ச் மற்றும் 65' இன்ச் டிஸ்பிளே கொண்ட அளவு மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்திருந்தது. அதேபோல், இந்தியாவிலும் இந்த மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பிராண்ட் தனிப்பட்ட சில புதிய இந்தியா ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

அமேசானுக்கு என்ன ஆச்சு? சிஇஓ பதவியில் இருந்து விலகும் ஜெஃப் பெசோஸ்: வாழ்த்து சொன்ன சுந்தர்பிச்சை!அமேசானுக்கு என்ன ஆச்சு? சிஇஓ பதவியில் இருந்து விலகும் ஜெஃப் பெசோஸ்: வாழ்த்து சொன்ன சுந்தர்பிச்சை!

ரெட்மி

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச், 55 இன்ச், மற்றும் 65 இன்ச் என்ற மூன்று மாடல்களில் கிடைக்கிறது. இது 4K டிஸ்பிளே, என்டிஎஸ்சி 85 சதவீதம், வைடு கலர் காமெட் மற்றும் உடல் விகிதத்தில் ஈர்க்கக்கூடிய 97 சதவீத டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த டிவிகள் மெட்டல் ஃபிரேமுடன் வந்துள்ளன, மேலும் எம்.இ.எம்.சி (மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் காம்பென்சேஷன்- Motion Estimation Motion Compensation) தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

இத்துடன்

இத்துடன் மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக டிவிகளுக்கு டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ்-எச்.டி ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் சேமிப்பு உடன், குரல் கட்டுப்பாட்டுக்கான தொலைதூர மைக்குகளைக் கொண்டுள்ளது. இவை 8-யூனிட் ஒலிபெருக்கி அமைப்புடன் குவாட் 12.5W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளனர். இந்திய ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் வகைகளில் கூகிள் அசிஸ்டன்ஸ்ட் ஆதரவு கிடைக்கும்.

BSNL அதிரடி: லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்டு பில்கள் மீது 50% தள்ளுபடி..BSNL அதிரடி: லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்டு பில்கள் மீது 50% தள்ளுபடி..

இவை

இவை குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ 73 செயலி மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் பேட்ச்வால் யுஐ உடன் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 55' இன்ச் மாடல் சீனாவில் RMB 2,299 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 26,000 ஆகும். அதேபோல், 65' இன்ச் மாடல் தோராயமாக ரூ. 37,300 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Redmi to launch Smart TVs in India in March : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X