ஜிபிஎஸ் ஆதரவோடு ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்: உடல் ஆரோக்கிய அம்சத்தோடு குறைந்த விலை!

|

ரெட்மி நோட் 10 எஸ் உடன் சியோமி இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்சை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் எம்ஐ வாட்ச் லைட் என அழைக்கப்படும் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் சிறந்த அம்சங்கள், மற்றும் சில வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஸ்மார்ட்வாட்சின் இந்திய மாறுபாடு சில மேம்பட்ட அம்சங்களோடு வருகிறது. சியோமியின் ரெட்மி ஸ்மார்ட்வாட்சின் புதிய அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை பார்க்கலாம்.

ஜிபிஎஸ் ஆதரவோடு ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்: உடல் ஆரோக்கிய அம்சத்தோடு!

ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 1.4 இன்ச் டிஎஃப்டி டச் டிஸ்ப்ளே காட்சியுடன் வருகிறது. இது 323 பிபிஎம் உடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 2.5டி அளவிலான வளைந்த டிஸ்ப்ளே காட்சி இதில் இருக்கிறது. இதில் வளைந்த மென்மையான காட்சி வடிவமைப்பு இருக்கிறது. இது ஸ்மார்ட்வாட்ச் கீறல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்சானது 35 கிராம் எடையுடன் வருகிறது. இதை நாள் முழுவதும் அணியும் போது அசௌகரியமான உணர்வை ஏற்படுத்துவதில்லை. இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் மே 25 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும், அதேபோல் இதை எம்ஐ ஹோம் மூலமாகவும் வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு பயன்பாடு குறித்து பார்க்கையில், இது 200-க்கும் மேற்பட்ட ஆப் அணுகல் கிடைக்கிறது. இருப்பினும் குறைந்த உள்சேமிப்பு வசதி காரணமாக ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு ஆப் மட்டுமே சேமிக்க முடியும். டச் மாதிரி கொண்டிருக்கும் எனவும் பிரத்யேக மல்டி ஃபங்ஷன் பட்டனைக் கொண்டிருக்கிறது. ஒரே கிளிக்கில் டிஸ்ப்ளேவை இயக்குவது போன்ற சில செயல்பாடுகளை கொண்டிருக்கிறது. ஜிபிஎஸ், துல்லியமான கண்காணிப்பு க்ளோனாஸ் மற்றும் இணைப்பிற்கான ப்ளூடூத் வி5.1 உடன் வருகிறது. ரெட்மி வாட்ச் ஒரே சார்ஜிங்கில் 10 நாட்கள் வரை சார்ஜ் நீடிக்கும் என்றும் முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணிநேரத்திற்கு குறைவாகவே ஆகும் என்று சியோமி குறிப்பிட்டுள்ளது.

ஜிபிஎஸ் ஆதரவோடு ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்: உடல் ஆரோக்கிய அம்சத்தோடு!

ரெட்மி வாட்சில் உள்ள சென்சார்களில் பிபிஜி இதய துடிப்பு சென்சார், 3 ஆக்சிஸ் அக்சிலரோமீட்டர், 3 ஆக்சிஸ் கைரோஸ்கோப் மற்றும் ஜிபிஎஸ் சென்சார் ஆகியவை அடங்கும். அதுமட்டுமின்றி இதில் நிகழ்நேர இதய துடிப்பு, தூக்க கண்காணிப்பு, ஸ்மார்ட்போன்களுக்கான இசை கட்டுப்பாடு அம்சம் ஆகியவை இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரன்னிங், ட்ரெட்மில்லிங், சைக்கிளிங், கிரிக்கெட் மற்றும் நீச்சல் ஆகிய 11 விளையாட்டு அம்சங்களோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனத்தை கையில் அணிந்தபடியே உடற்பயிற்சி, நீச்சல் உள்ளிட்ட அனைத்தையும் சிரமம் இன்றி மேற்கொள்ளலாம். இதன் எடை வெறும் 35 கிராம் ஆகும்.

ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் விலை குறித்து பார்க்கையில், இது ரூ.3,999 என இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மே25 முதல் பிளிப்கார்ட், எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டூடியோக்களில் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Smartwatch Launched in India with GPS Connectivity: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X