திரை அரங்கில் பார்த்த மாதிரி இருக்கும்: முழு எச்டி டிஸ்ப்ளே உடன் ரெட்மி ஸ்மார்ட் டிவி!

|

ரெட்மி ஸ்மார்ட் டிவி முழு எச்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் டி 31 எஸ்ஓசி அம்சங்களுடன் விரைவில் தொடங்கப்படும் என தகவல் தெரிவிக்கிறது. ரெட்மி ஸ்மார்ட்டிவி தொடரில் தற்போது 65 இன்ட். 55 இன்ட் மற்றும் 50 இன்ச் மாடல் டிவிகளை எக்ஸ் தொடரில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

எக்ஸ் தொடரில் ஸ்மார்ட்டிவி

எக்ஸ் தொடரில் ஸ்மார்ட்டிவி

ரெட்மி நிறுவனம் எக்ஸ் தொடரில் ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது. முழு எச்டி டிஸ்ப்ளே அம்சத்தோடு இது வரும் என கூறப்படுகிறது. டிப்ஸ்டரில் வெளியான தகவலின்படி, கூகுள் ப்ளே கன்சோல் பட்டியலுடன் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி கூகுள் ஆதரவுடன் வருகிறது. இது MiTV-M00Q3 மாதிரி எண் உடன் வருகிறது.

ஆண்ட்ராய்டு டிவி 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு டிவி 10 ஆதரவு

அதேபோல் பட்டியலில் தெரிவித்த தகவலின்படி, இந்த டிவி சியோமி ரெட்மி பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு டிவி 10 ஆதரவுடன் வருகிறது. அதேபோல் சியோமி நிறுவனம் புதிய ரெட்மி தொடர் ஸ்மார்ட்டிவி குறித்த எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ரெட்மி ஸ்மார்ட் டிவியின் திரை அளவு, விலை, விவரக்குறிப்புகள் குறித்த தகவல் சியோமி நிறுவனத்திடம் எதுவும் வெளியாகவில்லை.

பட்ஜெட்டுக்கு ஏற்ற விலை

பட்ஜெட்டுக்கு ஏற்ற விலை

அதேபோல் இது இந்திய சந்தைக்கு வருமா என்ற தகவலும் இல்லை. அதேபோல் இது பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த டிவியின் பெயர் டார்சன் மற்றும் மாடல் எண் MiTV-M00Q3 உடன் வருகிறது. 2 ஜிபி ரேம், மீடியா டெக் டி 31 குவாட் கோர் எஸ்ஓசி உடன் வருகிறது. மேலும் முழு எச்டி 1,920x1,080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

புதிய எம்ஐ டிவி பி1 தொடர்

புதிய எம்ஐ டிவி பி1 தொடர்

சியோமி நிறுவனம் அனைத்து புதிய எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட்டிவிகளை இத்தாலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது நான்கு வகைகளில் கிடைக்கிறது. இது டால்பி ஆடியோ, டால்பி விஷன், எச்டிஆர்10+ ஆதரவோடு வருகிறது. சியோமி இத்தாலியில் எம்ஐ டிவி பி1 சீரிஸ் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச்

32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச்

Mi TV P1 தொடரில் கிடைக்கும் ஸ்மார்ட்டிவிகள் குறித்து பார்க்கையில், இது 32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் என நான்கு வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. இவை அனைத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் டிவிகள் ஆகும். இது மீடியாடெக் சிப்செட்கள் மூலம் இயக்கப்படுகின்றன. 32 இன்ச் மாடல் ஸ்மார்ட்டிவியுடன் ஒப்பிடும்போது பிற மூன்று மாடல்கள் டிவிகளும் மாறுபட்ட விவரக்குறிப்புகளை கொண்டிருக்கிறது.

இரண்டு மாடல்களுக்கான விலை

இரண்டு மாடல்களுக்கான விலை

இந்த ஸ்மார்ட்டிவிகளில் இரண்டு மாடல்களுக்கான விலை அந்நாட்டு ஆன்லைன் வெளியீட்டு தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இந்த விவரங்களை பொறுத்தவரை எம்ஐ டிவி பி1 தொடர் 32 இன்ச் மாடல் இந்திய மதிப்புப்படி ரூ.24,800 ஆகவும் 43 இன்ச் மாடல் ஸ்மார்ட்டிவியானது இந்திய மதிப்புப்படி ரூ.39,900 ஆக இருக்கிறது. அதேபோல் உத்தேகவிலை குறித்து பார்க்கையில் இதன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவி விலை குறித்து பார்க்கையில் இதன் இந்திய மதிப்புப்படி ரூ.53,200 ஆக இருக்கும் எனவும் 55 இன்ச் மாடல் விலை இந்திய மதிப்புப்படி ரூ.57,600 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi SmartTV May Launching Soon With Full HD Display, 3 Sizes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X