Redmi Smart TV: 55 இன்ச் மாடலே ரூ. 25,000 தானா? 85 இன்ச் ரேட் இவ்வளவு கம்மியா? வெறித்தமான டிவி வாங்க ரெடியா?
ரெட்மி (Redmi) நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவி (Smart TV) வரிசையில் புதிதாக ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் ஸ்மார்ட் டிவி (REDMI Smart TV X 2025 Series Smart TV) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி சாதனத்தை சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி பிராண்டு அறிமுகம் செய்துள்ளது. பெரிய டிஸ்பிளே ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்க ஆசைப்படும் மக்களுக்காகவே இந்த ஸ்மார்ட் டிவியை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வெறித்தனமான டிவி பற்றிய விபரங்கள் இதோ.
இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 (REDMI Smart TV X 2025) வரிசையில் நிறுவனம் மொத்தம் 4 விதமான டிஸ்பிளே அளவு கொண்ட மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் X55 என்ற 55" இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட REDMI Smart TV X55 ஸ்மார்ட் டிவி மாடல், X65 என்ற 65" இன்ச் கொண்ட டிஸ்பிளே மாடல் REDMI Smart TV X65 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Redmi Smart TV: 55 இன்ச் மாடலே ரூ. 25,000 தானா? 85 இன்ச் ரேட் என்ன?
இந்த இரண்டு மாடல்கலையும் ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விருப்பத்துடன் ரூ. 25,000 முதல் ரூ. 30,000 விலை புள்ளிக்குள் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், X75 மற்றும் X85 என்ற 75" இன்ச் மற்றும் 85" இன்ச் அளவு கொண்ட REDMI Smart TV X75 மற்றும் REDMI Smart TV X85 டிஸ்பிளே ஸ்மார்ட் டிவியை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த 4 டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட்டிவிகள் அனைத்தும் 1.07 பில்லியன் கலர்ஸ் (colors), 94% DCI-P9 வைடு கலர் காமெட் (wide color gamut) மற்றும் 97.3% அல்ட்ரா ஹை ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ (ultra-high screen-to-body ratio) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த டிவி டிஸ்பிளே 240Hz அல்ட்ரா ஹை ரெஃப்ரஷ் ரேட் உடன் ஸ்மூத் கேம் ஆக்சிலரேஷன் (ultra-high refresh rate for smooth game acceleration) ஆதரவை கொண்டுள்ளது.
Redmi Smart TV X Series: 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்:
இந்த ஸ்மார்ட் டிவி 4K 144Hz ஹை ரெஃப்ரஷ் ரெட் (high refresh rate) ஸ்கிரீன் உடன் MEMC மோஷன் காம்பென்சேஷன் (motion compensation) மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. இது HDMI 2.1 சப்போர்ட் உடன் AMD ஃப்ரீசிங்க் சப்போர்ட் (FreeSync support) மற்றும் ஆட்டோமேட்டிக் லோ-லேடன்சி மோட் (automatic low-latency mode - ALLM) ஆகியவற்றை ஆதரிக்கிறது.
இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி (Redmi smart TV) 4K HDR டீகோடிங் (decoding) உடன் AI-SR சூப்பர் ரெசொலூஷன் அல்கோர்த்திம் (super-resolution algorithm) அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி ஏஐ அம்சத்துடன் மிகவும் பவர்புல் டிவியாக வெளிவந்துள்ளது. இது 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது. இது மீடியாடெக் MT9655 குவாட் கோர் கார்டெக்ஸ் A73 பிராசஸர் உடன் வருகிறது.
REDMI Smart TV X55, X65, X75 and X85 2025 மாடல் விலை என்ன?
இந்த ஸ்மார்ட் டிவி DTS X ஆதரவுடன் இயங்கக்கூடிய 25W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இந்த REDMI Smart TV X55, X65, X75 and X85 2025 மாடலின் விலை பற்றி பேசுகையில், REDMI Smart TV X55 2025 சாதனம் இந்தியாவில் தோராயமாக ரூ. 25,390 விலைலயில் எதிர்பார்க்கப்படுகிறது. REDMI Smart TV X65 2025 சாதனம் ரூ. 32,600 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
REDMI Smart TV X75 2025 சாதனம் இந்தியாவில் தோராயமாக வெறும் ரூ. 44,245 விலையிலும், REDMI Smart TV X85 2025 சாதனம் இந்தியாவில் தோராயமாக வெறும் ரூ. 55,895 விலையிலும் (price) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது சீன சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தைக்குள் இந்த ஸ்மார்ட் டிவி டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications