4கே எச்டிஆர் ஆதரவு, 30வாட்ஸ் ஸ்பீக்கர்: பிப்.,9 அறிமுகமாகும் ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ்43!

|

ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 43 ஆது இந்தியாவில் பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது.

ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 43

ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 43

ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 43 ஆனது இந்தியாவில் பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரெட்மி நோட் 11 சீரிஸ் மற்றும் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ உடன் வரும் என கூறப்படுகிறது.

30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் அம்சம்

30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் அம்சம்

ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 43 ஆனது டால்பி ஆடியோ ஆதரவோடு வருகிறது. இது 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் அம்சத்தை கொண்டுள்ளது. ரெட்மி நோட் 11 தொடர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுடன் பிராண்ட் தனது ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ சாதனத்தை வெளியிடும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது இந்த பிராண்ட் மற்றொரு சாதனத்தை இணைத்துள்ளது. ரெட்மி இந்தியா தனது புதிய ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 43 சாதனத்தை பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு

முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு

வரவிருக்கும் ஸ்மார்ட்டிவியின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு குறித்து பார்க்கையில் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43 ஆனது பெயர் குறிப்பிடுவது போல் குறைந்தபட்ச பெசல்களுடன் வருகிறது. இது 43 இன்ச் டிஸ்ப்ளே அளவோடு இடம்பெறும் என கூறப்படுகிறது. 43 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் இந்த ஸ்மார்ட்டிவி வரும் எனவும் டிவியின் உளிச்சாயுமோரம் உள்ளிட்ட வசதியோடு வரும் என கூறப்படுகிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43 ஆனது 4கே எச்டிஆர் மற்றும் டால்பி விஷன் வடிவமைப்போடு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43 டிவியானது டால்பி ஆடியோக்காக 30 வாட்ஸ் ஸ்பீக்கர் அம்சத்தோடு வரும் என கூறப்படுகிறது.

எதிர்காலத் தயார் நிலை மற்றும் முதன்மை செயல்திறன்

எதிர்காலத் தயார் நிலை மற்றும் முதன்மை செயல்திறன்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43 ஸ்மார்ட்டிவியானது எந்த செயலி மூலம் இயக்கப்படும் என்ற தகவலை நிறுவனம் குறிப்பிடவில்லை. இந்த டிவி எதிர்காலத் தயார் நிலை மற்றும் முதன்மை செயல்திறனோடு வரும் என கூறப்படுகிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43 ஸ்மார்ட்டிவியானது பேட்ச்வால் ஒருங்கிணைப்போடு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை வெளியான தகவல்களே இது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த சாதனத்தின் அறிமுகம் வெகு தொலைவில் இல்லை என்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் ஸ்மார்ட்டிவிகள் விலை

இந்திய சந்தையில் ஸ்மார்ட்டிவிகள் விலை

டிவிகள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுப்பு இல்லாத வீடுகள் கூட கண்டறியலாம் ஆனால் டிவிகள் இல்லாத வீடு என்பது அபூர்வமாகி வருகிறது. அதற்கேற்ப இந்திய சந்தையில் ஸ்மார்ட்டிவிகள் விலை நாளுக்கு நாள் மலிவாகி வருகின்றன. அதேபோல் தரம் மற்றும் அம்சங்களும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது. ஸ்மார்ட்டிவிகளை பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பல விலைப்பிரிவுகள் அம்சங்களில் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி ரெட்மி நிறுவனம் ஸ்மார்ட்டிவி எக்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு காட்சி அளவுகளில் ஸ்மார்ட்டிவி

இரண்டு காட்சி அளவுகளில் ஸ்மார்ட்டிவி

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் மற்றும் ரெட்மி ரூட்டர் ஏஎக்ஸ் 1800 ஆகிய சாதனங்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் இரண்டு காட்சி அளவுகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது இரண்டு அளவுகளில் வருகிறது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் இந்த ஸ்மார்ட்டிவி வருகிறது. இரண்டு டிஸ்ப்ளேக்களும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இது 4கே ரெசல்யூஷன் உடன் மென்மையான படத்தரவு ஆதரவை வழங்குகிறது. அதேபோல் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் மாடல் ஆனது ஃப்ரீசின்க் ப்ரீமியம் மற்றும் டால்பி விஷன் ஆதரவை கொண்டுள்ளது. அதேபோல் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி ரூட்டர் AX1800 ஆனது வைஃபை 6 ரூட்டர் வசதியோடு வருகிறது. டூயல் கோர் 880 மெகா ஹெர்ட்ஸ் சிபியூ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் இல்லை.

55 இன்ச் வேரியண்ட் மற்றும் 65 இன்ச் வேரியண்ட்

55 இன்ச் வேரியண்ட் மற்றும் 65 இன்ச் வேரியண்ட்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் விலை குறித்து பார்க்கலாம். ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் மாடலின் 55 இன்ச் வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35,100 ஆக இருக்கிறது. அதேபோல் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 65 இன்ச் வேரியண்ட் விலை ஆனது இந்திய மதிப்புப்படி ரூ.46,800 ஆக இருக்கிறது. ரெட்மி ரூட்டர் AX1800 ஆனது இந்திய விலை மதிப்புப்படி ரூ.2700 ஆக இருக்கிறது. ரெட்மி டிவிகள் ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ரூட்டர் வெள்ளை வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சிறப்பம்சங்கள்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சிறப்பம்சங்கள்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் அல்ட்ரா எச்டி ஆதரவோடு வருகிறது. (3,840x2,160 பிக்சல்கள்) தீர்மானத்தோடு வருகிறது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் இது கிடைக்கிறது. டிஸ்ப்ளே அளவுகளில் 10 பிட் வண்ண ஆழ ஆதரவு மற்றும் 94 சதவீதம் பி3 வண்ண வரம்பு கவரேஜ் உடன் வருகிறது. ரெட்மி டிவி மாதிரிகள் டால்பி விஷனுடன் ஃப்ரீசினக் ப்ரீமியத்தை ஆதரிக்கின்றன. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் காட்சி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் மேம்பட்ட பார்வை அனுபவத்துடன் வருகிறது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

ஆடியோவை பொறுத்தவரை, ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் நான்கு உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. இதன் வெளியீட்டுக்கு இரண்டு குழாய்கள் இருக்கிறது. மொத்த வெளியீடு அளவு குறித்து பார்க்கையில், 2x12.5W அவுட்புட்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது மீடியாடெக் எம்டிகே 9650 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவியானது AI-PQ மற்றும் AI-AQ படம் மற்றும் ஆடியோ மேம்பாடுகளுக்கான ஆதரவை கொண்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இது எச்டிஎம்ஐ 2.1 போர்ட், இரண்டு எச்டிஎம்ஐ 2.0 போர்ட்கள், ஏவி போர்ட், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள் ஆதரவோடு வருகிறது. இதில் நான்கு மைக்ரோஃபோன்கள் இருக்கின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Smart TV X43 Might Be Launching on February 9 in India: 30W Speakers With Dolby Audio

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X