Home
News

இரண்டு அளவு, இரண்டுமே 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே: ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் அறிமுகம்- தியேட்டர் மாதிரி இருக்கும்!

120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு விகிதத்துடன் கூடிய ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் விலை ஆனது இந்திய மதிப்பிப்படி ரூ.35,100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் ஸ்மார்ட்டிவிகள் பயன்பாடு

அதிகரிக்கும் ஸ்மார்ட்டிவிகள் பயன்பாடு

டிவிகள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுப்பு இல்லாத வீடுகள் கூட கண்டறியலாம் ஆனால் டிவிகள் இல்லாத வீடு என்பது அபூர்வமாகி வருகிறது. அதற்கேற்ப இந்திய சந்தையில் ஸ்மார்ட்டிவிகள் விலை நாளுக்கு நாள் மலிவாகி வருகின்றன. அதேபோல் தரம் மற்றும் அம்சங்களும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது. ஸ்மார்ட்டிவிகளை பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பல விலைப்பிரிவுகள் அம்சங்களில் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி ரெட்மி நிறுவனம் ஸ்மார்ட்டிவி எக்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் மற்றும் ரெட்மி ரூட்டர் ஏஎக்ஸ் 1800 ஆகிய சாதனங்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் இரண்டு காட்சி அளவுகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது இரண்டு அளவுகளில் வருகிறது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் இந்த ஸ்மார்ட்டிவி வருகிறது. இரண்டு டிஸ்ப்ளேக்களும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இது 4கே ரெசல்யூஷன் உடன் மென்மையான படத்தரவு ஆதரவை வழங்குகிறது. அதேபோல் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் மாடல் ஆனது ஃப்ரீசின்க் ப்ரீமியம் மற்றும் டால்பி விஷன் ஆதரவை கொண்டுள்ளது. அதேபோல் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி ரூட்டர் AX1800 ஆனது வைஃபை 6 ரூட்டர் வசதியோடு வருகிறது. டூயல் கோர் 880 மெகா ஹெர்ட்ஸ் சிபியூ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் இல்லை.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் விலை

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் விலை

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் விலை குறித்து பார்க்கலாம். ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் மாடலின் 55 இன்ச் வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35,100 ஆக இருக்கிறது. அதேபோல் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 65 இன்ச் வேரியண்ட் விலை ஆனது இந்திய மதிப்புப்படி ரூ.46,800 ஆக இருக்கிறது. ரெட்மி ரூட்டர் AX1800 ஆனது இந்திய விலை மதிப்புப்படி ரூ.2700 ஆக இருக்கிறது. ரெட்மி டிவிகள் ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ரூட்டர் வெள்ளை வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சிறப்பம்சங்கள்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சிறப்பம்சங்கள்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் அல்ட்ரா எச்டி ஆதரவோடு வருகிறது. (3,840x2,160 பிக்சல்கள்) தீர்மானத்தோடு வருகிறது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் இது கிடைக்கிறது. டிஸ்ப்ளே அளவுகளில் 10 பிட் வண்ண ஆழ ஆதரவு மற்றும் 94 சதவீதம் பி3 வண்ண வரம்பு கவரேஜ் உடன் வருகிறது. ரெட்மி டிவி மாதிரிகள் டால்பி விஷனுடன் ஃப்ரீசினக் ப்ரீமியத்தை ஆதரிக்கின்றன. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் காட்சி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் மேம்பட்ட பார்வை அனுபவத்துடன் வருகிறது.

டால்பி அட்மோஸ் ஆதரவு

டால்பி அட்மோஸ் ஆதரவு

ஆடியோவை பொறுத்தவரை, ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் நான்கு உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. இதன் வெளியீட்டுக்கு இரண்டு குழாய்கள் இருக்கிறது. மொத்த வெளியீடு அளவு குறித்து பார்க்கையில், 2x12.5W அவுட்புட்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது மீடியாடெக் எம்டிகே 9650 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவியானது AI-PQ மற்றும் AI-AQ படம் மற்றும் ஆடியோ மேம்பாடுகளுக்கான ஆதரவை கொண்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இது எச்டிஎம்ஐ 2.1 போர்ட், இரண்டு எச்டிஎம்ஐ 2.0 போர்ட்கள், ஏவி போர்ட், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள் ஆதரவோடு வருகிறது. இதில் நான்கு மைக்ரோஃபோன்கள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Redmi Smart TV X Launched with Two Size Varaints, 120 Hz Display, Ultra HD and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X