Home
News

தீபாவளி எதுக்கு? இப்போவே அதிருது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.23,499க்கு 4K டிவி.. 40 இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே!

பக்கா பிரீமியம் அம்சங்களை கொண்ட டிவிக்கு பட்டையை கிளப்பும் ஆஃபர் கிடைத்தால் கொக்குப்போல தூக்க தோன்றும் அல்லவா? அதைத்தான் இப்போது ரெட்மி டிவி பிரியர்கள் செய்யப் போகின்றனர். வெறும் ரூ.23,499க்கு 4K ரெசொலூஷன், 2ஜிபி ரேம் கொண்ட டிவி விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Redmi Smart Fire TV Specifications): இந்த ரெட்மி டிவி 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 78 டிகிரி வியூ ஆங்கிள் (View Angle), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) சப்போர்ட் வருகிறது. இதுவொரு மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது.

அதிருது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.23499க்கு 4K டிவி.. 40 இன்ச் டிஸ்பிளே!

அதோடு 6.5 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் (Response Time) கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி டிவியில் ஃபயர் ஓஎஸ் 7 (Fire OS 7) கொண்ட குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ55 (Quad-Core Cortex A55) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. இந்த டிவியில் ரெட்மி வாய்ஸ் ரிமோட் (Redmi Voice Remote) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) சப்போர்ட் உள்ளது. இந்த ரிமோட் மூலம் பிளே பேக் கன்ட்ரோல் (Play Back Control), சேனல் அப்/டவுன் (Channel up/down) மியூட் (Mute) ஆகியவற்றை கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.

அதோடு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் அமேசான் பிரைம் மியூசிக் (Amazon Prime Music) ஆகியவற்றின் சார்ட்கட் பட்டன்களும் இடம் பெற்றுள்ளன. இந்த டிவியின் ஆடியோவை பொறுத்தவரை, 12W ஸ்பீக்கர்கள் 2 கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, 24W சவுண்டிங் அவுட்புட் கிடைக்கும்.

இதில் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) சப்போர்ட உள்ளது. இந்த டிவியில் வை-பை 802 (Wi-Fi 802), ஏர்பிளே 2 (AirPlay 2), மிராகாஸ்ட் (Miracast), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

அதே போல 3 எச்டிஎம்ஐ (HDMI), 1 ஏஆர்சி (ARC) போர்ட், 2 யுஎஸ்பி (USB) போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) மற்றும் ஈதர்நெட் (Ethernet) போர்ட் வருகிறது. இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது, இதன் விலை ரூ. 26,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அறிமுக சலுகையாக ரூ.2000 குறைக்கப்பட்டது. ஆகவே, இந்த டிவி ரூ.24,999 விலைக்கு இன்று (செப்டம்பர் 29) முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அறிமுக சலுகை மட்டுமல்லாமல், எஸ்பிஐ (SBI) வங்கி கார்டுகளுக்கு ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் (Instant Discount) வழங்கப்படுகிறது.

ஆகவே, இந்த டிவியை வெறும் ரூ.23,499க்கு வாங்கிக் கொள்ள முடியும். இந்த ரெட்மி டிவியை அமேசான் (Amazon) மற்றும் எம்ஐ.காம் (Mi.com) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்களுடன் 4K டிவி விற்பனைக்கு வந்துள்ளால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Smart Fire TV 4K With Fire OS 7, 2GB RAM on Sale in India Check Specifications Price Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X