Home
News

வெறும் ரூ.8,999 போதுமா? லட்டு மாதிரி ஆஃபரில் ரெட்மி ஸ்மார்ட் எச்டி டிவி.. அமேசானில் 3 நாட்களுக்கு மட்டும்!

வெறும் ரூ.8,999 விலைக்கு எச்டி டிஸ்பிளே, மெட்டல் ஃபிரேம்டு பெசல்-லெஸ் ஸ்கிரீன், 8ஜிபி மெமரி, டால்பி ஆடியோ போன்ற அம்சங்களுடன் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி (Redmi Smart Fire TV) அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேலில் விற்பனைக்கு வந்துள்ளது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Freedom Festival Sale) ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை மூக்கில் விரல் வைக்கும்படியான தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மட்டுமே, மலிவு விலையில் டிவி வாங்க விரும்பும் மக்களை ஒட்டுமொத்தமாக தன்பக்கம் ஈர்த்துள்ளது.

வெறும் ரூ.8,999 போதுமா? லட்டு மாதிரி ஆஃபரில் ரெட்மி ஸ்மார்ட் டிவி!

இந்த டிவி மெட்டல் பெசல் லெஸ் ஸ்கிரீன், டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள், ரெட்மி வாய்ஸ் ரிமோட், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி ஆப்ஸ் போன்ற முக்கியமான அம்சங்களை கொண்டிருந்தும், இப்போது தள்ளுபடியில் மிகவும் மலிவான விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிவியின் முழு அம்சங்கள் எப்படி? எந்த வங்கி கார்டுகளுக்கு தள்ளுபடி கிடைக்கும் உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Redmi Smart Fire TV Specifications): இந்த ரெட்மி டிவி 32 இன்ச் (1366×768 பிக்சல்கள்) எச்டி ரெடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 178 டிகிரி வியூ ஆங்கிள், விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோல் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம், 96.9 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேசியோ கொண்டுள்ளது.

இதுவொரு மெட்டல் பெசல் லெஸ் ஸ்கிரீன் கொண்ட டிவியாகும். இந்த டிவியில் ஃபயர் ஓஎஸ் 7 (Fire OS 7) கொண்ட குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ35 (Quad Core Cortex A35) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.

ரெட்மி வாய்ஸ் ரிமோட் (Redmi Voice Remote) வருகிறது. இந்த ரிமோட்டில் அலெக்சா (Alexa), பிளே பேக் கன்ட்ரோல் (Play Back Controls), சேனல் அப்/டவுன், மியூட் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் மியூசிக் (Amazon Prime Music) ஆகிவற்றின் சார்ட்கட் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

10W கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் - எச்டி (DTS-HD), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual:X) சப்போர்ட் வருகிறது. மேலும், ஏர்பிளே (AirPlay), மிராகாஸ்ட் (Miracast), ப்ளூடூத் 5.0, வை-பை 802.11 ஏசி போன்ற கனெக்டிவிட்டி இருக்கிறது. அதோடு ஒரு எச்டிஎம்ஐ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எதர்நெட் (Ethernet), ஆன்டெனா (Antenna) வருகிறது.

இந்த டிவிக்கு ஒரு வருட வாரண்ட்டியும், டிவி பேனலுக்கு கூடுதலாக ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. இந்த டிவி கடந்த மார்ச் 21ஆம் தேதி விற்பனைக்கு வந்தபோது, ரூ.13,999ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் அறிமுக சலுகையாக ரூ.10,499 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது, இந்த விலையிலும் அமேசானில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரூ.10,499 மதிப்புள்ள இந்த டிவியை எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.1250 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே கார்டை பயன்படுத்தி இஎம்ஐயில் வாங்கினால், ரூ.1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த தள்ளுபடியை பயன்படுத்தினால், ரூ.8,999 க்கு ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Smart Fire TV 32 inches Deal on Amazon Great Freedom Festival Sale Specifications, Price, Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X