Home
News

வந்தா வாரி தூக்குவீங்க.. வெறும் ரூ.14,000 பட்ஜெட்.. 100 இன்ச் ப்ரொஜெக்டர்.. 1080P ரெசொலூஷன்.. எந்த மாடல்?

ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன் வாங்கும் பட்ஜெட்டில் 100 இன்ச் ஸ்கிரீன் ப்ரொசெக்சன் சப்போர்ட், 1080P ரெசொலூஷன் அவுட்புட், ஆட்டோ போகஸ், 32 ஜிபி மெமரி போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ரெட்மி ப்ரொஜெக்டர் 2 (Redmi Projector 2) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நம்மில் பலருக்கு டிவிக்கு அடுத்தபடியாக ப்ரொஜெக்டர் வாங்கி அதில் வீடியோ பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், மலிவான விலையில் கிடைக்கும் ப்ரொஜெக்டர்களில் குவாலிட்டி அவ்வளவு நன்றாக இருக்காது. இதனால், கம்மி விலையில் ப்ரொஜெக்டர் வாங்கவே பலர் தயங்குவார்கள். இவர்களுக்கு நல்ல வாய்ப்பாக ரெட்மி நிறுவனம் கம்மியான விலையில் பட்டாசான ப்ரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.14000 போதும்.. 100இன்ச் ப்ரொஜெக்டர்.. 1080P ரெசொலூஷன்.. எந்த மாடல்?

32 இன்ச் டிவி வாங்குவதற்கான விலையில் 100 இன்ச் ஸ்கிரீன் ப்ரொசெக்சன் சப்போர்ட்டுடன் இந்த ரெட்மி ப்ரொஜெக்டர் 2 மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. அதோடு ரிமோட் கன்ட்ரோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஃபுல் ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ரெட்மி ப்ரொஜெக்டர் 2 அம்சங்கள் (Redmi Projector 2 Specifications): இந்த ப்ரொஜெக்டர் எல்சிடி (LCD) டிஸ்பிளே டெக்னாலஜி கொண்டுள்ளது. இதில் 1080P ரெசொலூஷன் அவுட்புட் கிடைக்கும். 1.2:1 த்ரூவ் ரேசியோ (Throw Ratio) வருகிறது. இதன் அவுட்புட் ஸ்கிரீன் அளவானது, 40 இன்ச் முதல் 100 இன்ச் வரையில் கிடைக்கும்.

இந்த ப்ரொஜெக்டரில் இருந்து அதிகபட்சமாக 267 செ.மீ தொலைவு வரையில் ஸ்கிரீன் ப்ரொசெக்சன் (Projection) செய்துகொள்ளலாம். இந்த ரெட்மி ப்ரொஜெக்டரில் சைட் ப்ரொசெக்சன் (Side Projection) மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் உள்ளது. இதில் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (WI-FI 802) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரெட்மியின் எம்ஐயுஐ டிவி (MIUI TV) ஓஎஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரெட்மி ப்ரொஜெக்டரில் ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) மற்றும் வாய்ஸ் சப்போர்ட் (Voice Support) கொடுக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் ஸ்கிரீனிங் அனுபவத்துக்காக இன்டலிஜென்ஸ் ஆட்டோமேட்டிக் அப்ஸ்டகில் அவாய்டன்ஸ் (Intelligent Automatic Obstacle Avoidance) மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்கிரீன் என்ட்ரீ (Automatic Screen Entry) போன்ற பிரத்யேக டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 3W ஃபுல்-ரேஞ்ச் (Full-Range) ஸ்பீக்கர்கள் வருகின்றன. இதில் வான்ஓஎஸ் பனோராமிக் சவுண்ட் (WANOS Panoramic Sound) டெக்னாலஜி சப்போர்ட் உள்ளது. இந்த ப்ரொஜெக்டர் 65W ஃபவர் இன்புட் கொண்டுள்ளது. இதில் யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), ஹெட்போக் ஜாக் (Headphone Jack), டிசி - இன் போர்ட் (DC-IN Port) ஆகியவை வருகின்றன.

இந்த ரெட்மி ப்ரொஜெக்டர் 1.2 கிலோ எடைக் கொண்டுள்ளது. சாண்ட் (Sand) மற்றும் கிரீன் (Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.14,775 ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் விற்பனை தொடங்கி, நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. அதுமட்டுமல்லாமல், அறிமுக சலுகையில் வெறும் ரூ.11,360க்கு கிடைக்கிறது.

இவ்வளவு மலிவான விலையில் 1080p ரெசொலூஷன் ப்ரொஜெக்டர் கிடைப்பதால், மற்ற நாடுகளில் இருக்கும் ரெட்மி பிரியர்கள், அதன் அறிமுகத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த சில வாரங்களில், இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதோடு ரெட்மி ப்ரொஜெக்டர் 2 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.19,325ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Projector 2 With 1080P Resolution, Remote Control Check Specifications Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X